மலையாள இயக்குநர் படத்தை தயாரிக்கும் லோகேஷ்...அட நடிகர் நம்ம சூரியா!
பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

சூரி படத்தை தயாரிக்கும் லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்கம் தவிர்த்து ஜி ஸ்குவாட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்கவும் தொடங்கியுள்ளார் லோகேஷ். ஜி ஸ்குவாட் தயாரிப்பில் முதல் படமாக விஜயகுமார் நடித்த ஃபைட் கிளம் படம் வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தை தயாரித்து வருகிறார். அடுத்தபடியாக பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரி இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
#Soori to do a film under #LokeshKanagaraj production 🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) June 26, 2025
Final Talks going on with Malayalam Director #LijoJosePellissery (AngamalyDiaries, Jallikattu fame)🎬 pic.twitter.com/2pDGQj9RxK
மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் , ஜல்லிக்கட்டு , சுருளி , போன்ற பல வித்தியாசமான வெற்றிப்படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி. தமிழில் மம்மூட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தை இயக்கி கவனமீர்த்தார். மோகன்லாலை வைத்து இவர் கடைசியாக இயக்கி வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது.
மாமன் ஓடிடி ரிலீஸ்
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமான சூரி அடுத்தடுத்த கமர்சியல் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் . கருடன் படத்தைத் தொடர்ந்து சூரி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்து சமீபத்தில் வெளியான மாமன் திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிப்பெற்றது. ஜூன் 27 ஆம் தேதி இப்படம் ஜீ ஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது
கதாநாயகனாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்
இயக்கம் , தயாரிப்பு தவிர்த்து லோகேஷ் கனகராஜ் கதா நாயகனகாவும் அறிமுகமாக இருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக தற்காப்பு கலை பயின்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .





















