மேலும் அறிய

மீட்டு விட்டோம்.! லோகேஷ் மூலமாக... ஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கை!

நடிகர் ஸ்ரீ மனதளவில் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவரை மீட்டுவிட்டதாக, அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் ஓரிரு படங்கள் தான் நடிப்பார்கள். அந்த படங்கள் வரவேற்பு பெற்றால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். இதுவே தோல்வியில் முடிந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயமே. சினிமா பின்புலத்தோடு கால்பதிக்கும் பிரபலங்களுக்கே இந்த நிலைமை என்றால்... எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களின் நிலையை பற்றி சொல்லவா வேண்டும்?

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் அதிகளவில் பேசப்படுவது நடிகர் ஸ்ரீயைப் பற்றி தான். உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத படி மாறியிருந்த நிலையில், ஒரு வீடியோவை அண்மையில்  வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தான் அவரைப் பற்றி பேச வைத்தது. 


மீட்டு விட்டோம்.! லோகேஷ் மூலமாக... ஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கை!

கனா காணும் காலங்கள் சீசன் 2 மூலமாக சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகர் ஸ்ரீ. பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வழக்கு எண் 18/9 என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தான் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம். இந்தப் படம் தான் லோகேஷ் கனகராஜின் முதல் படம். இந்தப் படம் அவருக்கு நல்லவொரு அடையாளத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டார். ஆனால், ஒரு வாரத்திற்குள்ளாக அதிலிருந்து தானே வெளியே செல்வதாக அறிவித்தார்.

கடைசியாக இறுகப்பற்று என்ற படத்தில் நடித்தார். இந்தநிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு அவரது வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முடியின் நிறத்தை மாற்றி கொண்டு, பார்க்கவே இது ஸ்ரீயா என்பது போல் பலருக்கும் தோன்றியது. அவர் மன உளைச்சலில் இருப்பதாக சில தகவல்கள் பரவின. அதே போல் அவரது நிதி நிலைமையும், அவரது குடும்பத்தினரின் நிதி நிலையில் சரியில்லை என்றும்... இவருக்கு சம்பள பணத்தை கூட சரிவர தரவில்லை என கூறப்பட்டது.


மீட்டு விட்டோம்.! லோகேஷ் மூலமாக... ஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கை!

இந்த நிலையில் தான் போதை பழக்கும் குறித்து வெளியான செய்தி குறித்து நடிகர் ஸ்ரீ விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனக்கு புகையிலை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை தவிர வேற எந்தப் பழக்கமும் எனக்கு கிடையாது. நான் இப்போது ரொம்ப ஹேப்பியாக இருக்கிறேன். அதே போன்று நீங்களும் ஹேப்பியாக இருங்கள். இதை தெளிவுபடுத்தவே இந்த வீடியோவை பகிருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் நடிகர் ஸ்ரீ குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீ இப்போது தீவிர மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். சோஷியல் மீடியாவிலிருந்து விலகி சிகிச்சையில் இருக்கிறார். அவரை பற்றி தவறான கருத்துக்கள் அவரது உடல்நிலையை மேலும் பாதிப்படையச் செய்யலாம். ஆதலால், அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget