லோகேஷ் கனகராஜ் காட்டில் அடைமழைதான்...நாயகனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் டிசி படத்திற்கு லோகேஷ் கனகராஜ் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் படம் டிசி. வமிகா கபி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ராக்கி , சானி காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பெரும் தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக தற்போது சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி
‘கூலி’ படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த ‘கைதி 2’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இப்படியான நிலையில் அவர், இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. அண்மையில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து, கைதி 2க்கு முன்பாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த புதிய படத்தில் லோகேஷ், நாயகனாக களம் இறங்குகிறார்.ந்சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் வமிகா கபி நாயகியாக நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படத்திற்குப் “டி.சி.” என பெயரிடப்பட்டுள்ளது.
ராக்கி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன், சானி காகிதம் மற்றும் கேப்டன் மில்லர் படங்களுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் இளையராஜா திரைப்படத்தையும் இயக்கவிருந்தார். இப்படத்தின் பணிகள் பலவித காரணங்களால் தடைபட்டு உள்ளதால் லோகேஷ் கனகராஜை நாயகனாக வைத்து தனது ஸ்டைலில் ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார்
லோகேஷ் கனகராஜ் சம்பளம்
தற்போது லோகேஷ் தன்னுடைய காட்சிகளில் நடித்து வருகிறார். ஜனவரியில் அவரது படப்பிடிப்பு முடியவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் மற்றொரு தகவல் சமூக வலைதளத்தில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது. இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ரூ 35 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்பதே அந்த தகவல். படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் திரைக்கதையிலும் அவர் பணியாற்றி இருப்பதால் அவருக்கு இந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















