Jana Nayagan Audio Launch : முத்தம் கொடுத்த அட்லீ..பிளடி ஸ்வீட் என்ற லோகேஷ்..நெல்சன் சொன்ன அந்த வார்த்தை
Jana Nayagan Audio Launch Speech : ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , நெல்சன் திலிப்குமார் மற்றும் அட்லீ ஆகியர் மூவரது உரை இதோ

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜயின் தீவிர ரசிகர்களான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , நெல்சன் மற்றும் அட்லீ ஆகிய மூவரும் கலந்துகொண்டு உணர்ச்சிவசமாக பேசினர்.
விஜய் பற்றி நெல்சன்
ஜனநாயகன் இசை வெளியீட்டில் பேசிய இயக்குநர் நெல்சன் திலிப்குமார் " இந்த கூட்டத்தை பார்ப்பதற்கு அர்ஜெண்டினா உலக கோப்பை கால்பந்து விளையாட்டை பார்ப்பது போல் இருக்கிறது. விஜயுடன் இன்னொரு படம் பண்ணதான் எனக்கு ஆசை. பீஸ்ட் படத்தில் நான் சில தவறுகளை செய்திருந்தேன். பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோது விஜய் எனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து நான் ஓக்கேவாக இருக்கிறேனா என்று பார்த்துகொண்டே இருந்தார். 'உனக்கும் எனக்கும் இருக்க இந்த உறவே ஒரு படம்தான நம்ம நட்பை விட அந்த படம் பெருசா ' என விஜய் என்னிடம் சொன்னார்
லியோ 2 குறித்து லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் பேசியபோது 'மாஸ்டர் மற்றும் லியோ என்னுடைய கரியரில் மிக முக்கியமான படங்கள் . ஜனநாயகன் படத்தில் வேலை செய்த அனைவரையும் எனக்கு நன்றாக தெரியும். எல்லாருடனும் நான் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். உங்களுடைய ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. இதுதான் உங்களுடைய கடைசி படம்னு சொன்னது கொஞ்சம் வருத்தமா இருக்குனா. ஆனால் ஆல் தி பெஸ்ட் . விஜயிடம் ஒரு விஷயம் கேட்கவேண்டும் என்றால் நான் லியோ 2 படத்திற்கு டேட்ஸ் தான் கேட்பேன். அவர் நிச்சயம் பிளடி ஸ்வீட் என்று பதில் சொல்லியிருப்பார் " என்றார்
விஜய் பற்றி அட்லீ
இயக்குநர் அட்லீ பேசியபோது ' என்னுடைய வெற்றி , புகழுக்கு காரணம் விஜய் அண்ணா தான் . அண்ணா என்னை அணுகியபோது 50 படங்களில் நடித்திருந்தார். நான் வெறும் உதவி இயக்குநராக இருந்தேன். அவருக்காக ஒரு படம் இயக்கச் சொன்னார். வேறு யாரும் அப்படி செய்ய மாட்டார்கள்" என்று பேசி முடித்த அட்லீ மேடையில் ஓடிவந்து நடிகர் விஜயை கட்டிப்பிடித்தார் தோளில் முத்தமிட்டார்.





















