HBD Maddy : இராணுவம்.. மாடலிங்.. மேடைப்பேச்சு.. பர்த்டே பாய் Maddy-ஐ பத்தி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்..
2017-ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற Annual India Conference-இல் இவரும் ஒரு அங்கமாக இருந்தார்
தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் நடிகர் 'மாதவன்' . 90'ஸ் கிட்ஸின் கனவு நாயகனாக , சாக்லெட் பாயாக வலம் வந்தவடர். இன்று (01.06.2022) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இன்று மாதவன் பற்றி பலரும் அறியாத சில விஷயங்களை பார்க்கலாம்.
இயற்பெயர்:
ரசிகர்கள் மாதவனை சுருக்கி "Maddy" என செல்லமாக அழைத்தாலும் ,மாதவனின் இயற்பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன்.
சொந்த ஊர் :
மாதவன் சொந்த ஊர் சென்னை என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் வட இந்தியாவில் பிறந்தவர்.பீகாரில் உள்ள ஜாம்ஷெட்பூரில் (இப்போது ஜார்கண்ட்) பிறந்தவர். ஆனாலும் இவர் தமிழ் வம்சாவளி என்பதில் உங்களுக்கு டவுட் வேண்டாம். அப்பா தமிழகத்தை சேர்ந்தவர்தான். மாதவனும் தமிழ் பிராமண முறைப்படி வளர்க்கப்பட்டவர்தான்.
View this post on Instagram
குடும்பம் :
மாதவனின் தந்தை திரு. ரங்கநாதன் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாகவும், அவரது தாயார் திருமதி சரோஜா பாங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளராகவும் இருந்தார். அவருடைய தங்கை தேவிகா சாப்ட்வேர் இன்ஜினியர், இப்போது இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய மாதவன் தனது மாணவியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் சர்வதேச நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை பெற்று , இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி :
மாதவன் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் பட்டம் பெற்றார்.1988 இல், கலாசார தூதராக கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள ஸ்டெட்லரில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த ராஜாராம் கல்லூரியில் உதவித்தொகை பெற்றவர்.
NCC:
தனது கல்லூரி நாட்களில் மாதவன் NCC இல் இருந்தார் . எந்த அளவிற்கு என்றால் 22 வயதில் என்சிசி பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு, மகாராஷ்டிராவின் சிறந்த என்சிசி கேடட்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.
ராணுவத்தில் சேர விரும்பிய மேடி:
என்சிசியில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் இங்கிலாந்து சென்று பிரிட்டிஷ் ராணுவம், ராயல் நேவி மற்றும் ராயல் ஏர்ஃபோர்ஸ் ஆகியவற்றில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் இராணுவத்தில் சேர நினைத்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஆறு மாத வயது குறைப்பு காரணமாக நிராகரிக்கப்பட்டார்.மாடலிங்:
ஆரம்பத்தில் சில விளம்பர படங்கள் , ஃபோட்டோ ஷூட் என செய்து வந்த மாதவன் அவ்வபோது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
View this post on Instagram
திரைப்பட வாழ்க்கை:
பல்வேறு துணைக் கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, 1998 ஆம் ஆண்டு சாந்தி சாந்தி சாந்தி என்ற கன்னடப் படம் மூலம் மாதவனுக்கு இந்திய சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தது. 2001 இல் ரெஹ்னா ஹை டெர்ரே தில் மே படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்தபோது இந்திய சினிமா அவரை விடவே இல்லை. தமிழில் அலைபாயுதே மாதவனின் முதல் படம்.
சிறந்த மேடை பேச்சாளர் :
மாதவன் நடிக்க வருவதற்கு முன்னதாக பொது மேடையில் பேசுவதில் கெட்டிக்காரர். 2017 ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலை கழகத்தில், நடைப்பெற்ற Annual India Conference-இல் இவரும் ஒரு அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.