அபிராமி முதல் திலோத்தமா வரை...ஒரு பட ஹிட் கொடுத்து காணாமல் போன நடிகைகள்
தமிழில் ஒரு படத்தில் அறிமுகமாகி அந்த படத்தின் மூலம் ரசிகர்களையும் கவர்ந்து பின் பல்வேறு காரணங்களால் அடுத்த படத்தில் நடிக்காமல் போன நடிகைகளின் பட்டியலைப் பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் முதல் படத்தில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் கவனமும் பெற்றுள்ளார்கள். இவர் பெரிய ஸ்டாராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் போது அந்த நடிகை அப்படியே காணாமல் போய்விடுவார். அப்படி ஒரு படத்தின் நடித்து ரசிகர்கள் மனதில் நீலைத்த இடத்தை பிடித்த நடிகைகளைப் பார்க்கலாம்
ரோஷினி - குணா

1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்த படம் குணா. இதில் அபிராமி கேரக்டரில் நடித்தவர் ரோஷினி. மும்பையைச் சேர்ந்தவர். முதல் படம் கமல்ஹாசனுன் அடித்து 'கண்மணி அன்போடு' என்கிற பாடல் வழியாக ரசிகர்களை கொள்ளைக் கொண்டவர் ரோஷிணி. ஆனால் இதன் பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
ஷாஹீன் கான் - Youth

2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த யூத் படத்தில் நாயகியாக நடித்தார் ஷாகீர்ன் கான் . இந்த படத்திற்கு பின் அவர் தமிழில் தொடர்ச்சியாக நடிக்கவில்லை. தக்வீம் ஹசன் கான் என்பாரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது
பிரியங்கா கோத்தாரி - ஜே ஜே

மாதவன் நடித்த ஜேஜே படத்தில் இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் பிரியங்கா கோத்தாரி. இந்த படத்திற்கு பின் அவரை அடுத்தடுத்த படங்களில் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் தமிழில் நடிகையாக தொடரவில்லை.
கீது மோகன்தாஸ் - நள தமயந்தி

மலையாளத்தில் பிரபல நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸ் தமிழில் நல தமயந்தி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதன் பின் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் ஒன்னமன் ,கன்னகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தை இயக்கி வருகிறார்.
பிரியா கில் - ரெட்

அஜித்தின் ரெட் படத்தில் நாயகியாக அறிமுகமானர் பிரியங்கா கில் . இந்த படத்தைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார் .
மோனிகா காஸ்டெலினோ - மின்சார கண்ணா

விஜய்க்கு ஜோடியாக மின்சார கண்ணா படத்தில் நடித்தாஅர் மோனிகா காஸ்டெலினோ. இதுவே அவரது முதலும் கடைசியுமான தமிழ் படம்
மானு - காதல் மன்னன்

முதல் படத்தில் ரசிகர்களை கவர்ந்தவர்களில் இவர் பெயர் இடம்பெறாமல் இருக்க வாய்ப்பில்லை. அஜித்தின் காதல் மன்னன் படத்தில் நடித்த மானுதான் அவர். திலோத்தமா என்கிற பாடலை பாடாத ஆள் இருக்க முடியாது . அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு காணாமல் போய்விட்டார்





















