மேலும் அறிய

LEO Update: ’லியோ’விலும் அடியெடுத்து வைக்கும் ரோலக்ஸ்.. சாமர்த்தியமாக காய் நகர்த்தும் லோகேஷ்.. எப்படி தெரியுமா?

'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற சக்திவாய்ந்த எதிரி கதாபாத்திரத்தை ‘லியோ’ படத்தில் கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் லோகேஷ் கனகராஜிடம் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படமானது வருகின்ற அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது. ’விக்ரம்’திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படம் LCU-க்கு கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆகஸ்ட் 15ம் தேதி க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூனின் பிறந்தநாள் என்பதால் லியோ படத்தின் அவரது கதாபாத்திரம் குறித்த தகவலை வெளியிட்டு கெத்து காமித்தது. 

இந்தநிலையில், 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற சக்திவாய்ந்த எதிரி கதாபாத்திரத்தை ‘லியோ’ படத்தில் கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் லோகேஷ் கனகராஜிடம் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதையும் லோகேஷ் கனகராஜ் யாருக்கும் தெரியாமல் சாமர்த்தியமாக லியோ படத்தில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், காட்சியாக இல்லாமல் விஜய்யின் கதாபாத்திரம் சூர்யாவின் கதாபாத்திரத்துடன் தொலைபேசியில் உரையாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் உண்மையா என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஒருவேளை லியோ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தால் ’நேருக்குநேர்’ ’ப்ரெண்ட்ஸ்’ படத்திற்கு பிறகு விஜயுடன் சூர்யா இணையும் 3வது படமாக இது இருக்கும். 

மேலும், லியோ படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கிடைத்த தகவலின்படி, வருகின்ற செப்டம்பர் 29 அல்லது 30ம் தேதி மதுரையில் ஒரு பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவை தயாரிப்பாளர் தரப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல், படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்ச்சியை மலேசியா அல்லது துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், காந்தி ஜெயந்தியன்று (அக்டோபர் 2) மாலை 6.07 மணிக்கு லியோவின் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியிடப்படலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. 

தற்போது லியோ படத்தில் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது, காஷ்மீர் மாநிலம் மாநிலம் பஹல்காமில் சில நாட்களாக தளபதி விஜய் இல்லாமல் பேட்ச்வொர்க் ஷூட் நடைபெற்று வருவதாக தெரிகிறது. வருகின்ற ஆயுதபூஜை அன்று லியோ படம் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. படத்தில் நடிகர் விஜயை தவிர, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் மிஷ்கின், பாலிவுர் நடிகர் சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி, பாபு ஆண்டனி என பல நட்சத்திர பட்டாளமே உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இந்த படத்தை தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் பட எடிட்டிங்கும், ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு சண்டைக்காட்சிகளை இயக்கி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget