Actor Vijay: விஜய்யின் ‘லியோ கெட்டப்’ பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா? - லோகேஷ் சொன்ன சுவாரஸ்யமான பதில்..!
லியோ படத்தில் இடம் பெற்றுள்ள விஜய்யின் கெட்டப் பற்றிய தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
லியோ படத்தில் இடம் பெற்றுள்ள விஜய்யின் கெட்டப் பற்றிய தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகைகள் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், அபிராமி, நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியன், இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கின் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லியோ படத்தில் இருந்து முதல் பாடலாக ‘நா ரெடி’ பாடல், ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஊடகம் ஒன்றில் நேர்காணல் அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதில், லியோ படத்தின் முதல் போட்டோவாக காஷ்மீரில் பனிகளுக்கு நடுவில் நிற்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைலும் இடம் பெற்றிருந்தது. பொதுவாக விஜய் தன் படங்களில் தோற்றத்தை மாற்றி எல்லாம் பார்த்தது இல்லை. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “வாரிசு கடைசி ஷெட்யூல் நடக்கும் போது விஜய்யை முடி வளர்க்க சொல்லியிருந்தேன். கிட்டதட்ட 3 மாதங்கள் வளர்த்திருந்தார். அவருக்கு சுருள் முடியாகத்தான் இருந்தது. அதன்பிறகு டிசைனர் வச்சி ஸ்கெட்ச் பண்ணி பார்த்து விட்டு, இந்த லுக்கை தேர்வு செய்தோம். அப்புறம் போட்டோஷூட் எடுத்து கடைசியாக தான் இந்த கெட்டப்பை உறுதி செய்தோம். படத்துல விஜய் ரொம்ப நல்லா இருக்காரு என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
அதேபோல் படம் டைட்டில் வெளியான போதே ரிலீஸ் தேதி சொல்லியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நாம் சரியாக திட்டமிடுகிறோம். தயாரிப்பாளர்கள் நிறைய முதலீடு செய்கிறார்கள். அர்ப்பணிப்புடன் நடிக்க பிரபலங்கள் இருக்கிறார்கள். அதனால் எதுவும் தப்பு நடக்காமல் நாம தான் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் காஷ்மீரில் 52 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடந்தது. ஒருநாள் ஷூட்டிங் நடக்கவில்லை என்றாலும் செலவு செலவு தானே. அதனால் திட்டமிடுதல் என்பது தேவைப்படுகிறது. நான் நினைச்சது மாதிரி ஜூன் இறுதி மற்றும் ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு முடிந்தால் 3 மாதங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு கிடைக்கும் என திட்டமிட்டேன்' என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.