மேலும் அறிய

LEO Release: விஜய் பேனருக்கு பால் அபிஷேகம்..சேலத்தில் ‘லியோ’ ரிலீஸ் கொண்டாட்டம்

பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் என திருவிழா போன்று விஜய் படத்தை கொண்டாடினர்.

தமிழகத் திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று லியோ படம் நாடு முழுவதும் வெளியாகிவுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகிவுள்ளது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் பிரகாஷ் திரையரங்கில் ரசிகர்கள் உற்சாகமான முறையில் மேளதாளங்கள் முழங்க நடனமாடி லியோ திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதனிடையே பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் என திருவிழா போன்று விஜய் படத்தை கொண்டாடினர். இதனிடையே ரசிகர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு திரையரங்குக்குள் உள்ளே நுழையும் உட்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எந்தத் திரையரங்கு என்பது குறித்து தெரியாமல் டிக்கெட்டை வைத்துக்கொண்டு மாறி, மாறி ரசிகர்கள் ஓடிக்கொண்டிருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சிலர் தடுப்பு கம்பிகளை தாண்டி குதித்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். படிக்கட்டு ஏறிக்கொண்டு திரையரங்குக்குள் உள்ளே நுழைந்தபோது சுவர் உடைந்தது. மேலும் பேனர்கள் கிழிக்கப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சு முடியாமல் தவித்தனர். கூட்டத்தை சரிசெய்து திரையரங்குக்குள் ரசிகர்களை உள்ளே செல்ல வழி ஏற்படுத்தினர்.

LEO Release: விஜய் பேனருக்கு பால் அபிஷேகம்..சேலத்தில் ‘லியோ’ ரிலீஸ் கொண்டாட்டம்

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் லியோ படம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரையிலான நாட்களில் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்களில் "லியோ" திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி 19.10.2023 முதல் 24.10.2023-ஆம் தேதி வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் "லியோ" திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை ஒரு நாளில் அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படுகிறது. காலை 9.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.30 மணிக்குள் முடிவடையும் வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 01.30 மணி முதல் காலை 9.00 மணி வரை எந்த காட்சியும் திரையரங்குகளில் திரையிடக்கூடாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

LEO Release: விஜய் பேனருக்கு பால் அபிஷேகம்..சேலத்தில் ‘லியோ’ ரிலீஸ் கொண்டாட்டம்

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சேலம் வருவாய் கோட்டாட்சியர் 94450 00433 என்ற கைப்பேசி எண்ணிலும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் 94450 00434 என்ற கைப்பேசி எண்ணிலும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் 94450 00436 என்ற கைப்பேசி எண்ணிலும், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் 94450 00435 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். திரையரங்குகளில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல, சரியான இருக்கை வசதிகள், வாகன நிறுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget