Leo Special Show: நீதிமன்றத்தை நாடிய விஜய்யின் ‘லியோ’ படக்குழு.. முன்கூட்டியே திரையிட அனுமதி கிடைக்குமா?
லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கி, இரவு 1.30 மணிக்குள் இறுதிக்காட்சி திரையிடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
![Leo Special Show: நீதிமன்றத்தை நாடிய விஜய்யின் ‘லியோ’ படக்குழு.. முன்கூட்டியே திரையிட அனுமதி கிடைக்குமா? leo movie seven screen studio approached Madras High Court demanding early morning special show Leo Special Show: நீதிமன்றத்தை நாடிய விஜய்யின் ‘லியோ’ படக்குழு.. முன்கூட்டியே திரையிட அனுமதி கிடைக்குமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/7c7eec5a3a482a6592f0e829814661be1697440823849574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி ரசிகர் காட்சிக்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
நீதிமன்றத்தை நாடிய படக்குழு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி வழக்கை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் பிற்பகல் 1 மணிக்கு விசாரிக்க உள்ளது.
இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமபத்தில் அனுமதி வழங்கியது.அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது.
4 மணி, 7 மணி காட்சிகள்
முன்னதாக, ’லியோ’ படக்குழு தரப்பிலிருந்து 'அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைக்குமா?
’லியோ’ சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியிருந்தார். அதில், ’அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் - நீதிபதி அனிதா சுமந்த் முன்பு அவசர முறையீடு செய்தனர்.
அப்போது லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக ஒரு மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Actor Rahman: செய்தி பார்ப்பது இல்லை.. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கு.. பாலிவுட் என்ட்ரி.. மனம் திறந்த நடிகர் ரகுமான்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)