Leo Glimpse: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... பிறந்தநாளுக்கு காத்திருக்கும் செம கிஃப்ட்..லியோ படத்தில் இணைந்த கமல்..!
விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றியை குவித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யும் இணைந்துள்ள படம் “லியோ”. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்க்கு ஹீரோயினாக நடிகை த்ரிஷா களமிறங்குகிறார். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் நடிகை த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்த டாப் ஜோடியோடு லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கூட்டு சேர்ந்துள்ளார். லேகோஷ் கனகராஜுடன் மூன்றாவது முறையாக அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவும் பணியாற்றுகின்றனர். மேலும், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ் பணியாற்ற, வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் எழுதி வருகின்றனர்.
இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டப்போதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
படத்தில் இணைகிறாரா கமல்ஹாசன்..?
இந்தநிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி லியோ படத்தின் ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோவை அவருக்கு பரிசளிக்கும் விதமாக படக்குழு வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த வீடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்து இருப்பதாகவும், விஜய் 68 படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#LEO Glimpse:-#ThalapathyVijay Swag + Ulaganayagan #KamalHaasan voiceover + #LokeshKanagaraj's Stylish making🥵🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) June 8, 2023
Hope it happens as per Vikatan !!
And if this happens it may lead to the confirmation for LCU🤯 pic.twitter.com/TzKAq7iaEp
லியோ இசை வெளியீட்டு விழா:
முன்னதாக, லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் தமிழகத்தில் நடத்த விரும்புவதாகவும், அதன்படி திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நிகழ்ச்சியை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பெரும்பாலும், விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இங்குதான் நடைபெற்றது.