சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்...யார் இந்த தார்ஷன் கணேசன் ?
Dhaarshan Ganesan : நடிகர் திலகம் சிவாஜி கனேசனின் பேரனான தார்ஷன் கணேசன் தமிழ் படத்தில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜியின் நடிப்பை பின்பற்றி அடுத்தடுத்த தலைமுறையில் பல நடிகர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். சிவாஜியின் சொந்த குடும்பத்தில் இருந்தே பல நடிகர்களாக சினிமாவில் இருந்து வருகிறார்கள்.
நாயகனாகும் சிவாஜி பேரன்
சிவாஜி கணேசனுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் பிரபு மற்றொருவர் ராம்குமார். இதில் ராம்குமார் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பல படங்களை தயாரித்துள்ளார். மற்றொரு மகனான பிரது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து தற்போது பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தின் மூலம் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது சிவாஜியின் கணேசனின் மற்றொரு பேரனான தார்ஷன் கணேசன் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
யார் இந்த தார்ஷன் கணேசன்
சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார் மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர். இவரது முதல் மனைவி கண்ணம்மா. ராம்குமாருக்கும் கண்ணம்மாவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முத்தவரான துஷ்யந்த் தனது தந்தையும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இது தவிர்த்து சக்சஸ் மற்றும் மச்சி ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். துஷ்யந்த் தவிர்த்து தர்ஷன் , ரிஷ்யன் என இரு மகன்கள் உள்ளார்கள். இருவரில் ஒருவரான தார்ஷன் தான் தற்போது நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
ACTOR SHIVAJI GANESAN - GRANDSON - NEW HERO FROM LEGENDARY FAMILY - DHAARSHANGANESAN - NEW MOVIE 🎥 COMING SOON 🔜#DhaarshanGanesan @DhaarshanG pic.twitter.com/gnugHmfJEg
— Ramesh Bala (@rameshlaus) May 10, 2025
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தார்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் திலகத்தில் குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு முறை ஒரு நடிகர் அறிமுகமாகும்போது ஒட்டுமொத்த திரையுலகமே அவரது வருகையை மிக ஆவலோடு எதிர்பார்க்கும். அந்த வகையில் படத்தின் அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட வெளியாகாத நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கிவிட்டன.





















