Lal Salaam : அவர் வாசிக்க..நான் ரசிக்க..ஒரே இசை மழைதான்..- லால்சிங் மியூசிக் மேக்கிங்கை பகிர்ந்த ஏ.ஆர்.ஆர்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள லால் சலாம் படத்திற்காக, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடந்த 2012ல் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து ஸ்டண்ட் இயக்குநர்களை மையமாக வைத்து ஒரு டாக்குமெண்டரி படத்தையும், ‘ஸ்டாண்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் எ கேர்ள் அமாங் தி ஸ்டார்ஸ்’ என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியிருந்தார். மேலும் 'ஓ சாத்தி சால்' எனும் ஹிந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ‘லால் சலாம்’ படம் மூலம் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கி இருக்கிறார்.
View this post on Instagram
தற்போது, ’லால் சலாம் படத்திற்காக இசையமைக்கும் வீடியோ ஒன்றை, ஏ.ஆர்.ரகுமான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எ.ஆர்.ஆர் ஹார்மோனிய பெட்டியை வாசிக்கும் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதனை அருகில் அமர்ந்து ரசிக்கிறார்.
முன்னதாக லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ' லால் சலாம்' என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
View this post on Instagram
மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.