Lakshmika Sajeevan: 24 வயது நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு.. மலையாளத் திரையுலகில் அதிர்ச்சி!
Lakshmika Sajeevan: உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா. ஒரு யமதன் ப்ரேமகதா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து லக்ஷ்மிகா கவனமீர்த்துள்ளார்.
Actress Lakshmika Sajeevan: 24 வயது நிரம்பிய மலையாள நடிகையான லக்ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காக்கா எனும் திரைப்படத்தில் ‘பஞ்சமி’ எனும் கதாபாத்திரத்தில் மூலம் மலையாளத் திரையுலகில் பிரபலமான லக்ஷ்மிகா இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
கொரோனா காலக்கட்டத்தில் அஜூ அஜீஷ் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று கவனமீர்த்தது.
மேலும் உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா. ஒரு யமதன் ப்ரேமகதா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து லக்ஷ்மிகா கவனமீர்த்துள்ளார். மேலும் நடிப்பு தாண்டி வங்கி வேலையில் இணைந்த லக்ஷ்மிகா ஷார்ஜாவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முன்னதாக ஷார்ஜாவின் வங்கிப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பன்முகத் திறமை வாய்ந்தவரான லக்ஷ்மிகா இளம் வயது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மலையாளத் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் லக்ஷ்மிகா இறுதியாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. எல்லா இருளையும் தாண்டிய ஒளி நம்பிக்கையைத் தருகிறது எனும் கேப்ஷனுடன் துபாயில் இருந்து அவர் பகிர்ந்த இந்தப் பதிவு நெட்டிசன்களை வருத்தத்தில் ஆழ்த்தி வருகிறது.
View this post on Instagram
மேலும் படிக்க: Aalavandhan Movie Review: ஷாக்கிற்கு மேல் ஷாக் கொடுத்த கமல்.. 2கே கிட் பார்வையில் 'ஆளவந்தான்' எப்படி இருக்கு?