மேலும் அறிய

ABP Exclusive: திருச்சி மருமகளாகும் நயன்! விக்னேஸ்வரன் டூ விக்னேஷ் சிவன்! நினைவுகளை பகிரும் பெரியப்பா!!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வருகிற ஜூன் 9 ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.  

விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில்தான் நயன்தாராக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இந்தநிலையில், இவர்கள் இருவரும் வருகிற ஜூன் 9 ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.  

யார் இந்த விக்னேஷ் சிவன்..? 

திருச்சி மாவட்டம் லால்குடி வடக்கு தெருவை  சேர்ந்தவர் சிவக்கொழுந்து இவர்  சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இவரது மனைவி மீனாகுமாரி. சென்னை வடபழனி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு  பெற்றவர். இவர்களுக்கு விக்னேஷ்வரன் , ஐஸ்வர்யா என இரண்டு குழந்தைகள். இவர்களது பூர்வீகம் லால்குடி என்றாலும், பணிநிமித்தம் காரணமாக, கடந்த 1971ம் ஆண்டே சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.

தற்போது, சிவக்கொழுந்து உயிருடன் இல்லை, தாய்  விக்னேஷ்வரனின்  தங்கையுடன்  வசித்து வருகிறார். சிவக்கொழுந்து மற்றும் மீனாகுமாரி இவர்களின் மகன் விக்னேஸ்வரன் சினிமா துறைக்காக தனது பெயரை மாற்றி விக்னேஷ் சிவன் என்று வைத்துக்கொண்டார். இந்நிலையில் விக்னேஷ், நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் வரும் ஜூலை மாதம், 9ம் தேதி திருப்பதி திருமலையில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

விக்னேஷ் சிவனின் சிறுவயது புகைப்படங்கள் :

ABP Exclusive: திருச்சி மருமகளாகும் நயன்! விக்னேஸ்வரன் டூ விக்னேஷ் சிவன்! நினைவுகளை பகிரும் பெரியப்பா!!

பெரியப்பா கருத்து

விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை திருமணம் செய்வது குறித்து, அவரது பெரியப்பா மாணிக்கம் (வயது 78) கூறியபோது, "எனது தாய் தந்தைக்கு, 8 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள். நான்  தான் குடும்பத்திற்கு மூத்தவன். பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.

விக்னேஷ் சிவனின் தந்தை எனக்கு அடுத்து பிறந்தவர். ஒன்றாக கூட்டுக்குடும்பாக வசித்த நாங்கள், திருமணம் மற்றும் வேலை நிமித்தம் காரணமாக பிரிய துவங்கினோம். ஆனாலும், குழந்தை பாக்கியம் இல்லாத நாங்கள், எனது தம்பி குழந்தைகளாக விக்னேஷ் சிவனையும், ஐஸ்வர்யாவையும் சொந்த குழந்தை போலவே பாவித்தோம்.

எனது தம்பி  இறந்தபிறகு விக்னேஷ் சிவன் உள்ளிட்ட  யாரிடமும் ஒட்டு உறவு இல்லாமல் போய்விட்டது. விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கேள்விப்பட்டேன். 

எங்களுக்கு குழந்தைகள் இல்லாத குறையை போக்கியவர்கள்  விக்னேஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆவார்கள்.  கடந்த சில வருடங்களாக எந்த ஒரு உறவும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் விக்னேஷ் அவனுடைய தங்கையின் திருமணத்திற்கு எந்த அழைப்புகளும் கொடுக்கவில்லை என்பதே மிகப் பெரிய மன வருத்தமாக இருந்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவனுடைய திருமணத்திற்கு எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காதது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் விக்னேஷ் சிவன் எனது மகன் எங்கிருந்தாலும் நலமோடு வாழ வேண்டும் என்பதே எங்களது ஆசை ஆகும் என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Embed widget