Laal singh chaddha: பாக்ஸ் ஆபிஸில் படுத்ததா லால் சிங் சத்தா? சினிமா நிபுணர் தந்த டேட்டா!
லால் சிங் சத்தா திரைப்படம் 45.83 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மெகா ஹிட் ஆகி இருக்கிறது.
அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் உலகளவில் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோற்றுவிட்டதாகவும் சரியாக வசூல் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன. மேலும் சமூக வலைதளங்களில் பரவி வரும் பாய்காட் லால் சிங் சத்தா பாய்காட் அமீர்கான் போன்ற ஹேஷ்டேக்களும் படத்திற்கு பெரிதும் முட்டுக்கட்டை போட்டது.180 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் கூட வசூலிக்க முடியாமல் திணறி வருவதாகவும்; இதனால் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடிகர் அமீர்கான் ஆலோசித்து வருவதாகவும் முன்னதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் லால் சிங் சத்தா பாக்ஸ் ஆபிஸில் தோற்கவில்லை..வசூல் வேட்டையை குவித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்று டிரேட் அனலிஸ்ட் தரன் ஆதர்ஷ் இது குறித்த தகவல்களை புள்ளி விவரங்களுடன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
#LaalSinghChaddha is rejected... #LSC *5-day* total is lower than *Day 1* total of #ThugsOfHindostan [₹ 50.75 cr; #Hindi version], do the math... Thu 11.70 cr [#RakshaBandhan], Fri 7.26 cr, Sat 9 cr, Sun 10 cr, Mon 7.87 cr [#IndependenceDay]. Total: ₹ 45.83 cr. #India biz. pic.twitter.com/b8myhVtaAF
— taran adarsh (@taran_adarsh) August 16, 2022
அதில் லால் சிங் சத்தா திரைப்படம் 45.83 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை படத்தை முடக்குவதற்கான இன்னொரு ஆயுதமாக இந்த பாக்ஸ் ஆபிஸ் கதையை கிளப்பிவிட்டார்களா என்பது தெரியவில்லை. உண்மையில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மெகா ஹிட் ஆகி இருக்கிறது.
அமீர்கானின் சர்ச்சை கருத்து
கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாகவும் பேசினார் . அவரது இந்தப்பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி, ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பெற்றது.
அவர் பேசிய அந்தக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் அது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நடிகர் அமீர்கான், “ இது போன்ற பாய்காட் பாலிவுட்.. பாய்காட் அமீர்கான்.. பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்குகள் எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. காரணம், ஏராளமானோரின் இதயங்கள் எனக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை.
நாட்டை நேசிக்கிறேன்
நான் உண்மையில் இந்த நாட்டை நேசிக்கிறேன். நான் அப்படித்தான். சிலர் அப்படி உணர்ந்தால் அது துர்திஷ்டவசமானது. மேலும் தனது ரசிகர்களிடமும், பார்வையாளர்களையும் கேட்டுக்கொண்ட அமீர்கான், “ ஆனால் அது அப்படி இல்லை என்றும் தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் தயவு செய்து என் படங்களை பாருங்கள்” என்று பேசினார்.