அப்பாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு; காரில் வைத்து காதல் விஷயத்தை சொன்ன மல்லிகா! கே.எஸ்.ரவிக்குமார் ரியாக்ஷன் என்ன?
காதலிக்கிறீயா என்று சந்தேகப்பட்டு கேட்டுவிட்டார், நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டேன் என்று கே.எஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா கூறியுள்ளார்.
கேஎஸ் ரவிக்குமார்:
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். மாஸ் படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர். தன்னுடைய படங்களின் இறுதியில் ஒரு சில சீன்களில் வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இப்படி அவர் தொடரும் சில நிமிட காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே இவரையே பல இயக்குனர்கள் தங்களின் படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தனர்.
கே.எஸ்.ரவிக்குமார் படங்கள்:
சேரன் பாண்டியன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, தசவதாரம் என்று போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்குள்ள கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிகாந்தின் ஃபேவரட் இயக்குனர் ஆவார். ரஜினிகாந்தை தவிர சரத்குமார், கமல் ஹாசன் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி, தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் மகள்கள்:
சினிமாவைத் தாண்டி குடும்ப வாழ்க்கையில் சூப்பர் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார். கேஎஸ் ரவிக்குமாருக்கு ஜஸ்வந்தி, மல்லிகா மற்றும் ஜனனி என்று 3 மகள்கள் இருக்கிறார்கள். ஜஸ்வந்தி டாக்டராக இருக்கிறார். சென்னையில் அர்மோரா டெர்மடாலஜி கிளினிக் நடத்தி வருகிறார். அதோடு, அரவிந்த் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். மல்லிகா மகளிருக்கான லைஃப் கோச்சிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மற்றொரு மகள் ஜனனி பிட்னஸ் ஆர்வலராக இருக்கிறார். சொந்தமாக பிஸினஸ் செய்து வருகிறார்.
காதல் விஷயத்தை அப்பாவிடம் கூறிய மகள்:
இந்த நிலையில் தான் தன்னுடைய காதலுக்கு அப்பா ஓகே சொன்ன கதையை மல்லிகா பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படப்பிடிப்பு முடிந்து அப்பாவை கூட்டி வரை நான் தான் காரில் சென்றிருந்தேன். அப்போது என்னிடம் கொஞ்ச நாட்களாக நீ சரியில்லையே, என்ன மேட்டர் என்று கேட்டார். நான் இது தான் நல்ல சமயம் என கூறி எனக்கு ஒருத்தரை பிடித்திருக்கிறது என்று நான் சொல்லிவிட்டேன்.
என் கணவரின் போட்டோ எல்லாவற்றையும் பார்த்தார். அதன் பிறகு 6 மாதம் டைம் கேட்டார். அதுவரை நீ பொறுத்திருக்க வேண்டும் என கண்டீஷன் போட்டார். இது அவர்களின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அவர் சொத்து மதிப்பை பற்றி யோசிக்கவில்லை. நல்ல குடும்பமா என்று தான் பார்த்தார். ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். நானும் ஓகே சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார். அந்த 6 மாத காலம் ஆழ்ந்த யோசனைக்கு பின்னரே... மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டி திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.