Actor Dhanush next movie: விலகும் பிரியங்கா மோகன் - தனுஷுக்கு ஜோடியாகும் மற்றொரு இளம் நடிகை!
'டாக்டர்', 'எதற்கும் துணிந்தவர்', 'டான்' என அடுத்தடுத்த வெற்றிப் படங்களால், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் தனுஷுடன் நடிக்க உள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
ராக்கி, சாணி காயிதம் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்துள்ள இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படம் ’கேப்டன் மில்லர்’.
தனுஷ் - பிரியங்கா அருள் மோகன்
'டாக்டர்', 'எதற்கும் துணிந்தவர்', 'டான்' என அடுத்தடுத்த வெற்றிப் படங்களால், தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் பிரியங்கா அருள்மோகன், இப்படத்தில் தனுஷுடன் நடிக்க உள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது பிரியங்காவின் கால்ஷீட் கிடைக்காததாகத் கூறப்படுகிறது.
தனுஷ் ஜோடியாகிறாரா க்ரித்தி ஷெட்டி?
இந்நிலையில், தமிழில் பிரியங்கா போல், தெலுங்கில் ‘உப்பென்னா’, ’ஷ்யாம் சிங்கா ராய்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து டோலிவுட் ஆடியன்ஸ்களின் மனங்களை கொள்ளைக் கொண்டுள்ள இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தனுஷுக்கு ஜோடியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
View this post on Instagram
டோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் நடிகையாக வலம் வரும் க்ரித்தி ஷெட்டியை தமிழில் அறிமுகப்படுத்த பலருக்கும் இடையே போட்டா போட்டி நடந்துவந்த நிலையில், தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் க்ரித்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
இந்நிலையில், அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் ’கேப்டன் மில்லர்’ படத்தில் இவர் ஜோடி சேர உள்ளதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்