Samantha : ”ஒரே ரூமுக்குள்ள எங்க ரெண்டு பேரையும் அடைச்சு வெச்சா” : நாக சைதன்யாவுடனான பிரிவு குறித்து பேசிய சமந்தா..
"திருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின் போது பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை. அது ஏற்பதற்கு கடினமாக இருந்தாலும், அதுவே தங்களுக்கு சிறந்த தீர்வாக தெரிந்தது
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
விவாகரத்து அறிவிப்பு
இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின்னர் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தன.
தி பேமிலி மேன்
சமந்தா நடிப்பில் 'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ், புஷ்பா பாடல் உட்பட மேலும் சில படங்கள் வெளியானது முதல், சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. சமந்தாவின் உச்சபட்ச கவர்ச்சி, நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும், அதுவே இருவரும் பிரிவதற்கு காரணமாகவும் அமைந்ததாக ஏராளமான கருத்துகள் இணையத்தில் பரவின. ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த உண்மையான காரணத்தை தெரிவிக்கவே இல்லை.
காபி வித் கரண்
எது எப்படி இருந்த போதிலும், இவர்கள் இருவருமே பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில், சமந்தா இந்தி தொலைக்காட்சிகளில் பிரபல ஷோவான 'காபி வித் கரன்'இல் கலந்துகொண்டு நிறைய விஷயங்களை ஷேர் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அக்சய் குமாருடன் "ஊ சொல்றீயா மாமா" பாடலுக்கு சமந்தா போட்ட குத்தாட்டம் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி இருந்தது.
பிரிவு குறித்து
அந்த நிகழ்ச்சியில் தன் முன்னாள் கணவர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதன்முறையாக பதில் அளித்திருந்தார். 'காஃபி வித் கரன் 7' நிகழ்ச்சியில் திருமணம் குறித்து கரன் சில கேள்விகளை சமந்தாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, "திருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின் போது பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை. அது ஏற்பதற்கு கடினமாக இருந்தாலும், அதுவே தங்களுக்கு சிறந்த தீர்வாக தெரிந்தது" என்று தெரிவித்துள்ளார்.
ஒரே அறையில்…
இப்போது இருவரும் இணக்கமாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "இப்போது எங்களை ஒரு அறையில் அடைத்து வைத்தால், அங்கு கூர்மையான பொருட்களை வைக்காமல் இருக்க வேண்டும்" என்று கூறினார். பின்னர், "எதிர்காலத்தில் இந்தக் கோபம் மாறினாலும் மாறலாம்" என்றார். மீண்டும் காதல் வருமா என்ற கேள்விக்கு, "திரும்பவும் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, நான் இப்போது மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு வசதியாக உள்ளது. இனிமேல் நான் இன்னும் வெளிப்படையாகவே இருக்கப்போகிறேன்", என்றும் கூறி உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்