மேலும் அறிய

Ram Charan : அடேங்கப்பா! சொகுசு கார்கள், ஆடம்பர பங்களா... பல வழிகளில் ராம் சரணுக்கு குவியும் வருமானம் !

நடிகர் ராம் சரண் 38-வது பிறந்த நாளான இன்று அவரின் தோராயமான சொத்து மதிப்பு விவரம் வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது

டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி - சுரேகா தம்பதியின் ஒரே மகனான நடிகர் ராம் சரண் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் குவித்து வருகிறார்கள். மிகவும் கோலாகலமாக ராம் சரண் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டும் இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. 

குடும்பத்துடன் ராம் சரண்
குடும்பத்துடன் ராம் சரண்

ஒரே வாரிசு :

தெலுங்கு திரையுலகின் மெகா பவர் ஸ்டார் என கொண்டாடப்படும்  நடிகர் ராம் சரண் நடிகர் சிரஞ்சீவியின் ஒரே மகன் என்பதால் அவரின் சொத்துக்கள் அனைத்திற்கும் அதிபதி ராம் சரண் மட்டுமே. சமீபத்தில் வெளியான தகவலின்படி அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1370 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடிகராக மட்டுமின்றி ராம் சரண் தனது குடும்ப பெயரான கொனிடேலா என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவி நடித்த 150-வது திரைப்படத்தை ராம் சரண் கொனிடேலா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் 164 கோடி வசூலித்தது. அதே போல சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்த சயீரா நரசிம்மா ரெட்டி திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளை வசூலித்தது. 

எகிறும் வருமானம் :

திரைப்படங்களை தயாரிப்பது மட்டுமின்றி 34 நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக ராம் சரண் இருப்பதால் அதன் மூலமும் வருமானம் எகிறுகிறது. ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ 1.8 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது. இது வரையில் ஒரு படத்திற்கு சம்பளமாக 30 முதல் 40 கோடி வரை பெற்று வந்த ராம் சரண் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்துக்கு 40 கோடி சம்பளமாக பெற்றார். அப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான பிறகு தனது சம்பளத்தை ரூ.100 கோடி வரை உயர்த்தியுள்ளார் என கூறப்படுகிறது. 

அசரவைக்கும் ராம் சரண் கார் கலெக்ஷன்:

ராம் சரணுக்கு கார்கள் கிரேஸ் அதிகம். எந்த அளவிற்கு பிரியம் என்பது அவர் வைத்திருக்கும் கார்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். ஆடி மார்ட்டின் வி8 வான்டேஜ், ரேஞ்ச் ரோவர், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், ஃபெராரி போர்டோபினோ, ஆஸ்டன் மார்ட்டின், மெர்சிடிஸ் மேபேஜ் GLS 600 என பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அதிலும் மெர்சிடிஸ் மேபேஜ் GLS 600 காரின் மதிப்பு மட்டுமே சுமார் 4 கோடி என கூறப்படுகிறது. சொந்தமாக ட்ரூஜெட் விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் ராம் சான்றான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Ram Charan : அடேங்கப்பா! சொகுசு கார்கள், ஆடம்பர பங்களா... பல வழிகளில் ராம் சரணுக்கு குவியும் வருமானம் !

ஆடம்பர பங்களா :

தந்தை சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாசனாவுடன் ஐதராபாத்தில் 25000 சதுர அடி கொண்ட ஆடம்பரமான சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார் ராம் சரண். ஐதராபாத்தின் மிகவும் ஆடம்பரமான காலனி என அறியப்படும் ஜூப்லி ஹில்ஸ் காலனியில் வசித்து வரும் இந்த பங்களாவில் ஏராளமான ஆடம்பர வசதிகள் உள்ளது என்றும் அதன் மதிப்பு 40 கோடி என்றும் கூறப்படுகிறது. ராம் சரண் - உபாசனா திருமணம் 2012-ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணமாகி இத்தனை ஆண்டுகள் வாழ்க்கையை என்ஜாய் செய்த தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குழந்தை பிறக்கவுள்ளது. 

ஷங்கருடன் கூட்டணி சேரும் ராம் சரண் :

தற்போது நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் RC 15 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிக்கிறார் கியாரா அத்வானி. மேலும் இப்படத்தில் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் ராம் சரண் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியாகியுள்ளதால் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
Embed widget