மேலும் அறிய

Kadhalikka Neramillai: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை ஷூட்டிங் ஓவர்!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவந்த காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

காதலிக்க நேரமில்லை

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கிருத்திகா உதயநிதி. தனது முதல் படத்தை ரொமாண்டிக் காமெடி படமாக இயக்கி ஹிட் கொடுத்த கிருத்திகா அடுத்தபடியாக விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.

இதனையடுத்து கடந்த ஆண்டு காளிதாஸ்  ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்திற்காக “பேப்பர் ராக்கெட்” என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியிருந்தார். இதுவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தனது அடுத்தப் படமான காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கிவந்தார் .

காதலிக்க நேரமில்லை

ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த தகவலை கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். கூடிய விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கலாம். வணக்கம் சென்னை படத்தைப் போலவே இப்படமும் ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்து இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படங்கள்

காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். வரும் ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது தவிர்த்து எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி பிரதர் படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் , பூமிகா சாவ்லா , சரண்யா பொன்வண்ணன் , வி.டி.வி கணேஷ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள் 

ஜெயம் ரவி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மற்றொரு படம் ஜீனி , புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார். வமிகா கப்பி , க்ரித்தி ஷெட்டி , கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையைமைத்து வருகிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அதிமுக, பாஜக, பாமக எம்.எல்.ஏக்கள் அமளி!
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அதிமுக, பாஜக, பாமக எம்.எல்.ஏக்கள் அமளி!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மிMK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அதிமுக, பாஜக, பாமக எம்.எல்.ஏக்கள் அமளி!
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அதிமுக, பாஜக, பாமக எம்.எல்.ஏக்கள் அமளி!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை?  12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
International Yoga Day: சர்வதேச யோகா தினம் - பெருங்கடல் தொடங்கி கரடுமுரடான மலை உச்சி வரையில் ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்
International Yoga Day: சர்வதேச யோகா தினம் - பெருங்கடல் தொடங்கி கரடுமுரடான மலை உச்சி வரையில் ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்
AUS vs BAN: இந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக்.. அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் கலக்கல்!
இந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக்.. அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் கலக்கல்!
Embed widget