மேலும் அறிய

Kayal Actress Abi Navya: “250 ஆடிசன் சென்றேன்; அட்ஜஸ்மெண்ட் செய்வீர்களா என்றார்கள்..” - மொத்தமாக போட்டு உடைத்த கயல் சீரியல் நடிகை

ஆடிசனுக்கு போன இடங்களில் இந்த மாதிரிதான் தன்னிடம் கேட்டுள்ளதாகவும், 250 ஆடிசனுக்கு மேல் பல இடங்களில் சென்றுள்ளதாகவும் கூறினார் நடிகை அபி நவ்யா.

பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக சில வக்கிர புத்திக்கொண்ட ஆண்களால், அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகுவதும் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

நம் நாட்டில் மக்கள் அதிகம் யோசிக்ககூடிய, பேசக்கூடிய அரசியல் மற்றும் சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் என பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகிறது. அந்தத் துறையில் இதெல்லாம் சாதாரணம் என்று பொதுபுத்தி உள்ளவர்கள் கூறினாலும், அதில் இருப்பவர்களும் பெண்கள் தானே என்ற எண்ணம் தற்போது பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. Metoo மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் வெளியில் கூறியதால்தான், பலரும் இவர்கள் எல்லாம் இதுபோல நடந்துக்கொண்டிருக்கிறார்களா? என்ற ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

கடந்த காலங்களில் தங்களுக்கும் ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளியில் கூறாமல் இருந்தனர். அதற்கான வாய்ப்பும் குறைவாகவும் இருந்தது. தற்போது, நிலைமை அப்படி இல்லை, இப்போதுள்ள நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள், தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியில் சொல்லத் தொடங்கிவிட்டனர்.



Kayal Actress Abi Navya: “250 ஆடிசன் சென்றேன்; அட்ஜஸ்மெண்ட் செய்வீர்களா என்றார்கள்..” - மொத்தமாக போட்டு உடைத்த கயல் சீரியல் நடிகை

அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ‘கயல்’ சீரியலில் நடித்து வரும் அபி நவ்யா, சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு முயற்சி செய்தபோது, அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வீர்களா? எனக் கேட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றியபோது, சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், தனது முதல் சீரியல் பிரியமானவளே என்றும் கூறினார். சீரியலில் ரொம்ப ஈஸியாக எல்லாம் வாய்ப்பு கிடைத்துவிடாது. ரொம்ப கஷ்டப்பட்டுதான் சீரியல்களில் நடிக்க முடியும் என்றும், வாய்ப்பு தேடி போகும் இடத்தில் தன்னிடம் நேரடியாகவே முகத்துக்கு நேராக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முடியுமா? என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள் என்றும் என்ற அதிர்ச்சி தகவலை அபி நவ்யா கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ஆடிசனுக்கு போன இடங்களில் இந்த மாதிரிதான் தன்னிடம் கேட்டுள்ளதாகவும், 250 ஆடிசனுக்கு மேல் பல இடங்களில் சென்றுள்ளதாகவும், அந்த இடங்களில் அட்ஜெட்ஸ்ட்மெண்ட் குறித்து நேராடியாகவே கேட்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

புதுசாக சினிமாவிற்குள் நுழைய நினைக்கும் பெண்களுக்கு இதுபோன்ற பல பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், பெண்கள் தான் ஜாக்கிரையுடன் இருக்க வேண்டும் எனவும் அபி நவ்யா கூறியுள்ளார். இவரின் இந்தப்பேட்டி சின்னத்திரையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget