Vijay Sethupathi | Katrina Kaif | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரினா கைஃப் - த்ரில்லர் படத்தில் கமிட்டான மக்கள் செல்வன்!
முன்னதாக இந்தியில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் இயக்குநர்களான ராஜ் -டிகே இயக்கி வரும் ஒரு வெப் சீரிசிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
pride of kollywood சினிமா நடிகர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் விஜய் சேதுபதியை நாம் தவிர்க்க முடியாது. பெரிய பட்ஜெட் படங்களோ..சிறிய பட்ஜெட் படங்களோ தன்னை நாடி வரும் இயக்குநர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி. என்னதான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் நடிப்பதற்கான ஸ்கோப் இருந்தால் போதும் என்பதுதான் விஜய் சேதுபதியின் பாலிஸியாக இருக்கிறது. பல திரைப்படங்களில் சிறப்பு விருந்தினராக கூட களம் கண்டு வருகிறார் விஜய் சேதுபது. சமீபத்தில் கூட ஜனகராஜின் கோரிக்கையை ஏற்று ஒபாமா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அந்த செய்திகளும் இணையத்தில் வைரலலானது. தற்போது பேன் இந்தியா திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி பாலிவுட் பக்கம் அதிக கவனம் பெற்று வருகிறார். ஒரு காலத்தில் வாரிசு நடிகர்கள் மட்டுமே பாலிவுட் பக்கம் தலைக்காட்ட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் புதிய தலைமுறை படைப்பாளிகள் அதனை மாற்றி வருகின்றனர்.
View this post on Instagram
எந்த மொழி கலைஞராக இருந்தால் என்ன , அவர்களுக்கு திறமை இருந்தால் நிச்சயம் பாலிவுட் பக்கம் அங்கீகரிக்கப்படுகிறார்கள் . தென்னிந்திய நடிகர்கள் தனுஷ், சமந்தா , நாக சைத்தன்யா , ஜீவா உள்ளிட்ட பலர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் சூழலில் நடிகர் விஜய் சேதுபதியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். விஜய் சேதுபதி முன்னதாக இந்தியில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் இயக்குநர்களான ராஜ் -டிகே இயக்கி வரும் ஒரு வெப் சீரிசிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைஃபுடன் இணைந்து நடிக்க புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். மெர்ரி கிருஸ்துமஸ் என்ற பெயரில் உருவாக உள்ள அந்த படத்தி்ன் அப்டேட்டை கிருஸ்துமஸ் நாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டு்ள்ளனர்.
View this post on Instagram
இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நடிகை கத்ரினா கைஃப் , ”புதிய தொடக்கம்...இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் மெர்ரி கிறிஸ்மஸ் படத்துடன் மீண்டும் தொடங்குகிறேன்! ஸ்ரீராம் சாருடன் நான் எப்போதும் பணியாற்ற விரும்பினேன், திரில்லர்களை வெளிப்படுத்தும் கதைகளில் அவர் மாஸ்டன். அவர் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. மேலும் நடிக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன் “ என தெரிவித்துள்ளார். கத்ரீனா மற்றும் விஜய் சேதுபதி இணையும் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது.இது 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் படமாக இருக்கும் என தெரிகிறது.மெர்ரி கிருஸ்துமஸ் திரைப்படம் அடுத்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது. விஜய் சேதுபதி , கமல்ஹாசன் , ஃபஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களின் காம்போவில் , மிகுந்த எதிர்பர்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.