மேலும் அறிய

Kalaignar Memorial Day: சாமானியன் எழுப்பிய குரல்... இன்றுவரை பேசப்படும் கலைஞரின் பராசக்தி.. காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் வரலாற்றில் பராசக்தி திரைப்படத்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடமுண்டு. 60 ஆண்டுகளுக்கு மேலும் இன்னும் பராசக்தி திரைப்படம் நிலைத்து நிற்பதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்!

இன்று நவீன சினிமா இயக்குநர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த படங்களின் வரிசையில் பராசக்தி படத்தை  நிச்சயம் குறிப்பிடுவார்கள்.

1952 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதினார் கருணாநிதி. அவரது சினிமா கரியரில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் பராசக்தி.

பராசக்தி

வாழ்க திராவிடம் என்கிற பாடலில் இருந்து தொடங்குகிறது படம். இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய பாதிப்புகளால் தமிழ் நாட்டில் இருந்து தங்கள் குடும்பங்களை விட்டு பலர் பர்மாவிற்கு பிழைக்க செல்கிறார்கள். அப்படி சென்ற குடும்பம் தான் குணசேகரனுடைய (சிவாஜி) குடும்பம். பர்மா சென்று செல்வ செழிப்பாக வாழ்கிறது அவரது குடும்பம் தனது இரு அண்ணன்களின் வளர்ப்பில் வளரும் குணசேகரனுக்கு சொகுசாக வாழ்க்கையைத் தவிர எதுவும் தெரியாது.

தமிழ்நாட்டில் இருக்கும் தனது தங்கையின் கல்யாணத்திற்கு கடும் போர் நிலவி வந்த சூழலில் கிளம்பி செல்கிறான் குணா. ஆனால் சென்னை வந்ததும் ஒரு பெண்ணால் ஏமாற்றப்படுகிறான். மதுரையில் இருக்கும் தனது தங்கை வீட்டிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் எனப் போராடுகிறான். அதே நேரத்தில் குணாவின் தங்கை ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்து, ஒரு விபத்தில் தனது கணவனையும் இழக்கிறாள்.

பர்மாவில் போர்ச்சூழல் தீவிரமடைந்த காரணத்தினால் நடைபயணமாக தமிழ்நாட்டிற்கு பயணப்படுகிறார்கள் தமிழர்கள். அதில் குணாவின் இரண்டு அண்ணன்களும், அண்ணியும் அடக்கம். இந்தப் பயணத்தில் குணாவின் இரண்டாவது அண்ணன் உயிரிழக்கிறார். பிழைப்பிற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் குணசேகரன் பைத்தியமாக நடிக்கத் தொடங்குகிறான்.

இறுதியாக தனது தங்கையை அடையாளம் கண்டு அவளது நிலையை உணர்ந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்கிறான் குணசேகரன். இப்படியாக கதை நகர படத்தின் இறுதியில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குணா பேசும் வசனங்களும் வார்த்தைகளும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் படம் அனைவராலும் பேசப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளன.

சாமானிய மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் என ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் பார்த்து கேள்வி எழுப்பிய காட்சியை முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தது கருணாநிதி தான் . அன்னியன், ரமணா, முதல்வன், கத்தி, என அரசியல் பேசிய எந்தப் படத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டாலும் அந்தப் படங்களில் கதாநாயகன் பேசும் வசனங்கள். தொனி, வார்த்தைகளின் பிரயோகம் என அனைத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தப் படம் ‘பராசக்தி’.

 தனது வசனங்களின் மூலம்  தீண்டாமை, சமூக சீர்கேடுகள் பெண் ஒடுக்குமுறை ஆகிய அனைத்தையும் கேள்விகளுக்கு உட்படுத்தினார் கருணாநிதி.  மேலும் திராவிடம் குறித்தான சிந்தனைகளையும், மக்களுக்கு பகுத்தறிவு குறித்தான விழிப்புணர்வையும் புரட்சிகரமான தொனியில் இப்படம் மூலம் கொண்டு சேர்த்தார் கருணாநிதி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget