Brindha Sivakumar : புலிக்கு பிறந்தது புலிகள்தான்... நிரூபித்த சிவகுமார் வாரிசுகள்... மகன்களை தொடந்து மகளும்...
Brindha dubbed for Alia : நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா சிவகுமார் 'பிரம்மாஸ்திரா' படத்தின் முக்கியமான கதாபாத்திரமான கதாநாயகியான ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியுள்ளார்.
Brindha Sivakumar part in Brahmastra : சூர்யா - கார்த்தியை தொடர்ந்துனு மும்மரமாக களம் இறங்கிய அடுத்த வாரிசு
பழம்பெரும் நடிகரான சிவகுமார் தனது சிறப்பான நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்தவர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு இணங்க அவரின் இரண்டு மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள். இருவரும் அவரவர் பணிகளில் சிறந்து விளங்குகிறார்கள். இருவருக்குமே தனித்னியாக ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மகன்கள் மட்டும்தான் மின்னுவர்களா நானும் ஒரு கலைஞனின் மகள் என்பதை நிரூபித்து இருக்கிறார் நடிகர் சிவகுமாரின் ஒரே மகள் பிருந்தா சிவகுமார்.
பாடகி இன்று டப்பிங் ஆர்ட்டிஸ்ட்:
பிருந்தா சிவகுமார் ஒரு நல்ல பாடகி. அவரின் குரலில் ஏராளமான பாடல்கள் தமிழ் படங்களில் வெளியாகியுள்ளன. குறிப்பாக "மிஸ்டர் சந்திரமௌலி", 'ராட்சசி', 'ஜாக்பாட்', 'பொன்மகள் வந்தாள்', 'ஓ2' போன்ற படங்களில் தனது இனிமையான குரலால் ரசிகர்களை கவந்தவர் பிருந்தா.
View this post on Instagram
பாடல்களில் கவனம் செலுத்தி வந்த பிருந்தா சிவகுமாருக்கு ஒரு மெகா பட்ஜெட் ஃபான் இந்திய படமான 'பிரம்மாஸ்திரா' படத்தில் ஒரு அங்கமாக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரமான கதாநாயகியான ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியுள்ளார் பிருந்தா சிவகுமார்.
View this post on Instagram
நேர்மறையான விமர்சனம் பெற்ற 'பிரம்மாஸ்திரா':
அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதியான இன்று உலகம் முழுவத்திலும் திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ஏராளமான சர்ச்சையில் சிக்கி ‛ஃபாய்காட் பிரம்மாஸ்திரா’ என்கிற ஹாஸ்டாக் ட்ரெண்ட்டான பிறகு வெளியாகியுள்ளது. படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.