Karnataka election: கர்நாடகத் தேர்தலில் கலக்கல் அறிவிப்புகள் வெளியிட்ட காங்கிரஸ்! வாக்குறுதிகளில் பிரதிபலிக்கும் திமுக!
மே 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டபேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 5 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
![Karnataka election: கர்நாடகத் தேர்தலில் கலக்கல் அறிவிப்புகள் வெளியிட்ட காங்கிரஸ்! வாக்குறுதிகளில் பிரதிபலிக்கும் திமுக! Karnataka elections Congress follow the footsteps of Dmk in election manifesto Karnataka election: கர்நாடகத் தேர்தலில் கலக்கல் அறிவிப்புகள் வெளியிட்ட காங்கிரஸ்! வாக்குறுதிகளில் பிரதிபலிக்கும் திமுக!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/f23e6384ef0fa24c5c3f7259ec14d7a41682657141235574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து வரும் மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், தீவிர இறுதிக்கட்ட பிரச்சாரங்களில் அனைத்துக் கட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்ற காரணமாக இருந்த யுக்திகளை தற்போது கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் முக்கியப் பங்காற்றின. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உயர்க்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பெண்கள் மத்தில் பெரும் வரவேற்பு பெற்றன.
அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் உயர்க்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேட்டப்பட்டன. அதேபோல குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறித்துள்ளார்.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வித்திட்ட இந்தத் திட்டங்களை கர்நாடக தேர்தலில் கையில் எடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதன் படி மே 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டபேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 5 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, கர்நாடகா முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் ஆகிய வாக்குறுதிகலை கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இவை அனைத்தும் ஆட்சிபொறுப்பேற்ற முதல் நாளிலே நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை, பெண்கள் இலவச பேருந்துப்பயணம் என அடுத்தடுத்த திமுகவின் வாக்குறுதிகளை மற்ற மாநிலங்களும் கையில் எடுக்கத் தொங்கியுள்ளது திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என திமுகவினர் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
மேலும் படிக்க: "வருத்தம் தெரிவிச்சிக்கிறேன்"...பிரதமர் மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே...சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)