மேலும் அறிய

Kanthara 2: விரைவில் தொடங்க இருக்கும் காந்தாரா 2 படப்பிடிப்பு... என்னக் கதையாக இருக்கும்?

காந்தாரா திரைப்படட்த்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை முடித்துவிட்டதாகவும் படப்பிடிப்பு இந்த ஆண்டில் தொடங்கப்படலாம் எனவுன் படக்குழு சார்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான கன்னட மொழித் திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தை இயக்கி நடித்திருந்தார். காந்தாரா திரைப்படம் வெளியான சில நாட்களில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதன் காரணத்தால் அது இந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. வெறும் 16 கோடி செலவில் எடுக்கப் பட்ட இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் மொத்தம் 400 கோடி ரூபாய் வசூல் சேர்த்தது. மேலும் அதிக வருவாய் ஈட்டிய கன்னட மொழித் திரைப்படங்களில் கே. ஜி. எஃப் திரைப்படத்திற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது காந்தாரா. இந்தப் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட விழாவில் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தான் எழுதி வருவதாகவும் கூடுதலான தகவலை விரைவில் தெரிவிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த செய்தியை கேட்டப்பின்பு காந்தாரா படத்தின் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்திருக்கிறார்கள். தற்போது ரிஷம் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் முழு திரைக்கதையையும்  எழுதி முடித்துவிட்டதாகவும் இந்த ஆண்டில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப் பட்டுவிடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

காந்தாரா திரைப்படம் வரலாற்று கதையை பின்னனியாகக் கொண்ட திரைப்படம் என்பதால் அந்த வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் முயற்சியில் ரிஷப் ஷெட்டி தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களிடையே காந்தாரா முதல் பாகம் பெரும் எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே உண்டாக்கியிருப்பதால் அந்த எதிர்பார்ப்பிற்கு சற்றும் குறையாமல் படத்தின் இரண்டாம் பாகம் இருக்கவேண்டும் என்பதற்காக படக்குழு கடும் உழைப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது படப்பிற்கான லொகேஷனும் உடைகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான கன்னடத் திரைப்படம். இந்த படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. கதாநாயகியாக சப்தமி கெளடா நடித்திருந்தார். மேலும் அச்யுத் குமார், ப்ரமோத் ஷெட்டி கிஷோர் ஆகியவர் நடித்திருந்தனர். கே,ஜி,எஃப் திரைப்படத்திற்கு பின் கன்னட சினிமாவில் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு படமென்றான் காந்தாராவைச் சொல்லலாம். காந்தாரா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்தப் பேச்சு எழுந்தபோது படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி அதை மறுத்துவிட்டார். ஏற்கனவே ஹிந்தியில் டப் செய்யப் பட்டிருப்பதாலும் ரீமேக் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்தார் ரிஷப் ஷெட்டி

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Embed widget