Kangana Ranaut: 'வீட்டுக்கு வர யாருக்குமே தகுதியில்லை..': பாலிவுட்டை சில்லுசில்லாக உடைத்த கங்கனா!
எதாவது நடிகரின் பெயரையோ, நடிகையின் பெயரையோ சொல்வார் என எதிர்பார்த்த யூடியூப் சேனலுக்கு கங்கனா அதிர்ச்சி அளித்தார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத்(Kangana Ranaut) எந்த விஷயமாக இருந்தாலும் சரி, தன் கருத்துக்களை எந்தவித தயக்கமுமின்றி முன்வைப்பவர். அதுமட்டுமல்ல, பல நேரங்களில் கங்கனாவின் அறிவும், புரிதலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு இணையத்தில் பெரும் விமர்சனங்கள் எழும். அப்படியான சர்ச்சை கருத்துக்களை பாரபட்சமில்லாமல் அள்ளித் தெளிப்பதில் கைதேர்ந்தவர் கங்கனா. தற்போது பாலிவுட் நடிகர்களை வாரி எடுத்து இருக்கிறார் கங்கனா. பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் தனக்கு பாலிவுட்டில் ஒரு நண்பர் கூட இல்லை என குறிப்பிட்டுள்ளார் கங்கனா. யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டிக்கொடுத்த கங்கனாவிடம், உங்கள் வீட்டுக்கு எந்த சினிமா நண்பரை அழைத்துச் செல்வீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
View this post on Instagram
கங்கனா எதாவது நடிகரின் பெயரையோ, நடிகையின் பெயரையோ சொல்வார் என எதிர்பார்த்த யூடியூப் சேனலுக்கு கங்கனா அதிர்ச்சி அளித்தார். அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாலிவுட்டில் யாருமே இதற்கு தகுதியானவர்கள் அல்ல. அவர்களை வெளியில் பார்ப்பதோடு சரி. வீட்டுக்கெல்லாம் அழைத்துச்செல்ல முடியாதவர்கள் எனக் குறிப்பிட்டார். அப்படியென்றால் ஒரு நண்பர் கூட பாலிவுட்டில் இல்லையா என மீண்டுமொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பட்டென பதில்சொன்ன கங்கனா, என் நண்பராக இருக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட தகுதி வேண்டும். பாலிவுட்டில் உள்ள யாருக்குமே அதற்கான தகுதி இல்லை என்றார். கங்கனாவின் இந்த கருத்துக்கு பாலிவுட் ரசிகர்கள் பலரும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
சமீபத்தில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் கங்கனா. அதுகுறித்து பேசிய கங்கனா, ''தென்னிந்திய நடிகர்களுக்கும் ரசிர்களுக்கும் இடையே எப்போதும் தொடர்பு இருக்கிறது. அது ரசிகர்கள் என்பதையும் தாண்டிய ஓர் பந்தம். இந்தி சினிமா துறையை பொறுத்தவரை, பிரபலங்களின் மகன்கள் வெளிநாடுகளுக்குப் படிக்க சென்றுவிடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார்கள்; ஹாலிவுட் படங்கள் மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் கத்தி மற்றும் நைஃப் வைத்துதான் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அவர்களின் பேச்சு வித்தியாசமாக இருக்கிறது. இப்படி இருப்பவர்களால், ஹிந்தி மக்கள், ரசிகர்களுடன் எப்படி தொடர்படுத்திக்கொள்ள முடியும்? இங்கிருக்கும் மக்களுக்கு இப்படிப்பட்ட நட்சத்திரங்களுடம் எப்படி தங்களுடன் இணைத்து தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்? பாலிவுட் வாரிசுகள் வேக வைத்த முட்டைகள் (boiled eggs) போல இருக்கிறார்கள்; நான் யாரையும் தவறாக சித்திகரிக்க வேண்டும் என்பதற்காக கூறவில்லை’’ என்றார்