மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா ரணாவத் மரியாதை
தியேட்டரில் வெளியாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளதால் அவர் மரியாதை செலுத்தியுள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தியேட்டரில் வெளியாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu: Actor Kangana Ranaut pays tribute at former Chief Minister J Jayalalithaa's memorial at Marina Beach in Chennai, ahead of the release of her film 'Thalaivii', that is based on the former CM. pic.twitter.com/Wb1puvjpgU
— ANI (@ANI) September 4, 2021
Actress @KanganaTeam paid respect at late.Chief Minister #Jayalalithaa Memorial, who acted in the Movie #Thalaivi the biography of Former Chief Minister #Jayalalithaa pic.twitter.com/DYRgLKGnLe
— Abinesh Arjunan (@The_Abinesh) September 4, 2021
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். தொடக்கத்தில் தலைவி எனத் தமிழிலும் ஜெயா என தெலுங்கு மற்றும் இந்தியிலும் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் பின்னர் மூன்று மொழிகளிலும் ‘தலைவி’ என்றே மாற்றப்பட்டது. மேலும் டிசம்பர் 2020ல் திரைப்படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் ஏப்ரல் 2021ல் திரைப்படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. பின்னர் தேதி அறிவிக்கப்படாமல் வெளியாகும் தேதி தள்ளிப்போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்கிற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
A trade show of #Thalaivii was arranged for a few #TN distributors by Trident Ravi of @tridentartsoffl for producer @vishinduri. The feedback is good and all were raving about #KanganaRanaut & @thearvindswami crackling chemistry, one of the highlights of the film. pic.twitter.com/Y3vFu1U73a
— Sreedhar Pillai (@sri50) August 27, 2021
முன்னதாக, கங்கனா ரணாவத் தொடர்ச்சியாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்ட சர்ச்சை கருத்தால் அவரது ட்விட்டர் கணக்கே முடக்கப்பட்டது. அண்மையில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானதை அடுத்து அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த கங்கனா ஏடாகூடமாக கருத்துக் கூறியிருந்தால் அந்தப் பதிவையே நீக்கியது இன்ஸ்டாகிராம். தனது பதிவு நீக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமையே கலாய்த்தார் கங்கனா. அனைத்து சமூக ஊடகங்களோடும் ‘டிஷ்யூம்’ மோட்டில் இருந்துவருகிறார் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.