Kangana Ranaut : "கல்யாணம் ஆன மாதிரி ஃபீல் பண்றேன்.." : கங்கனா ரனாவத் வாங்குன காருக்கு விலை தெரியுமா?
திரைப்படங்களும், லாக் அப் ஷோவும் காசை அள்ளி கொடுத்திருக்கின்றன. அதனால் தாக்கத் திரைப்பட ப்ரிவ்யூ ஷோவிற்கு தனது புதிய காஸ்ட்லி காரில் வந்து இறங்கினாராம்.
எப்போது ஏதாவது அதிரடி செய்யும் கங்கனா ரனாவத் புது காரை வாங்கியிருக்கிறார்
இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடிப்பது வழக்கம். தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமயங்களில் இவரது கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி விடும். தற்போது லாக் அப் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ஜெயில் போன்ற ஒரு செட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை போட்டியாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
கங்கனா ரனாவத் நடித்துள்ள புதிய படமான தாகட் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமீப காலமாகவே என்ன பேசினாலும் ஹெட்லைன்ஸில் வந்து கொண்டிருக்கும் கங்கனாவுக்கு, திரைப்படங்களும், லாக் அப் ஷோவும் காசை அள்ளி கொடுத்திருக்கின்றன. அதனால் தாகத் திரைப்பட ப்ரிவ்யூ ஷோவிற்கு தனது புதிய காஸ்ட்லி காரில் வந்து இறங்கினாராம்.
View this post on Instagram
அந்த நிகழ்விலேயே தான் வாங்கிய புதிய சொகுசு காரை அறிமுகப்படுத்தினார். மெர்சிடிஸ் மேபட்ச் எஸ் 680 (Mercedes Maybach S680) வகை காரான இதன் விலை, 3.6 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த காருடன் நடிகை கங்கனா, அவர் சகோதரி ரங்கோலி சந்தல், அவர் மகன் பிருத்விராஜ், சகோதரர் அக்ஷித் உட்பட குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், காரின் மேல் வைக்கப்பட்ட ரிப்பனை, நீக்கிக் கொள்ளலாமா? என்று கேட்கும் கங்கனா, 'இப்போதுதான் கல்யாணம் ஆனது மாதிரி ஃபீல் பன்றேன்' என்று தெரிவித்துள்ளார்.