மேலும் அறிய

Kangana Ranaut: ‘மாதவிடாய் ஒன்றும் நோயோ, குறைபாடோ அல்ல’.. ஸ்மிருதி இரானி கருத்துக்கு கங்கனா ஆதரவு..!

Kanagana Ranaut : வேலைக்கு செல்லும் பெண் என குறிப்பிடுவதே முதலில் கட்டுக்கதை. மனிதகுலத்தின் வரலாற்றிலேயே வேலை செய்யாத பெண் என யாருமே இல்லை.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு குறித்து மாநிலங்கவையில் தனது கருத்தினை தெரிவித்து இருந்தார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. 

மாதவிடாய் சமயத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வலி என்பது வெவ்வேறு மாதிரி இருக்கும். அதற்கு விடுப்பு அவசியமா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட அந்த பெண் தான் தீர்மானிக்க வேண்டும். மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு இல்லை எனவே அதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை என்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன.  

Kangana Ranaut: ‘மாதவிடாய் ஒன்றும் நோயோ, குறைபாடோ அல்ல’.. ஸ்மிருதி இரானி கருத்துக்கு கங்கனா ஆதரவு..!
கங்கனா ரனாவத் ஆதரவு :

ஆனால் ஸ்மிருதி இரானியின் கருத்திற்கு தனது ஆதரவை சோசியல் மீடியா மூலம் தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். "வேலைக்கு செல்லும் பெண் என குறிப்பிடுவதே முதலில் கட்டுக்கதை. மனிதகுலத்தின் வரலாற்றிலேயே வேலை செய்யாத பெண் என யாருமே இல்லை. விவசாய பணிகளில் ஈடுபடுவதில் இருந்து வீட்டு வேலை, குழந்தைகளை பராமரித்தல் வரை பெண்கள் என்றுமே ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர் செய்யும் அர்பணிப்புக்கு எதுவும் தடையாக இருந்ததே இல்லை. மருத்துவ அவசியம் ஏற்பட்டால் தவிர மாதவிடாய் காலத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு தேவையில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் மாதவிடாய் என்பது நோய் அல்லது குறைபாடு கிடையாது" என போஸ்ட் செய்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இது போல சமுதாயம் சார்ந்த பல விஷயங்களுக்கு மிகவும் துணிச்சலாக தனது கருத்தினை முன் வைக்க கூடியவர் நடிகை கங்கனா ரனாவத் என்பது குறிப்பிடத்தக்கது. 

Kangana Ranaut: ‘மாதவிடாய் ஒன்றும் நோயோ, குறைபாடோ அல்ல’.. ஸ்மிருதி இரானி கருத்துக்கு கங்கனா ஆதரவு..!

சந்திரமுகி 2 :

திரையுலகை பொறுத்தவரை தமிழில் பி. வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரின் நடிப்பில் 'சந்திரமுகி 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியானது. இப்படத்தில் கங்கனாவின் அபாரமான நடிப்பு பாராட்டை  பெற்றது. 

'எமர்ஜென்சி' ஒத்திவைப்பு :

மேலும் முதல் முறையாக நடிகை கங்கனா ரனாவத் இயக்குநராக அறிமுகமாகும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் வெளியீடு  2024ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் கேரக்டரில் நடித்துள்ளார் கங்கனா ரனாவத். நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் மீண்டும் அப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

ரித்தேஷ் ஷாவின் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் அனுபம் கெர், மிலிந்த் சோமன், மஹிமா சவுத்ரி, மறைந்த சதீஷ் கௌஷிக் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.       மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget