Golden visa: வெற்றி மீது வெற்றி.. உலக நாயகனுக்கு கோல்டன் விசா.. அமீரகம் வழங்கிய அங்கீகாரம்..
இதன் மூலம் கலை , மற்றும் பொழுது போக்கினை மேம்படுத்தும் வகையில் துபாயில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பை வேண்டுகிறது அந்நாட்டு அரசு .
கமல்ஹாசனை அங்கீகரித்த துபாய் அரசு :
உலகம் முழுவதும் விருதுகளை வாங்கி குவித்த உலக நாயகனுக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய அமீரக அரசு தற்போது உலக நாயகனுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. 5 மற்றும் 10 ஆண்டுகள் வேலிடிட்டி உள்ள இரண்டு கோல்டன் விசாக்கள் உள்ளன, இதில் கமல்ஹாசனுக்கு 10 வருடங்கள் வேலிடிட்டி கொண்ட கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வருடங்களுக்கு துபாயில் தங்கி கமல்ஹாசன் தனது கலை பங்களிப்பை அந்த நாட்டிற்கு வழங்க முடியும் . அல்லது பணியாற்ற முடியும். தேசிய ஸ்பான்சரின் அனுமதி இல்லாமல் முழு உரிமையுடன் குடிமகன்களை போல செயல்பட துபாய் அரசு உரிமைகளை வழங்குகிறது. 10 வருடங்கள் கழித்து இந்த விசாவை புதுப்பித்தல் போதுமானது.
#UAE’s prestigious 10-year #GoldenVisa given to #KamalHaasan. @ikamalhaasan was one of the first to be recommended for it, but due to pandemic and his busy shooting schedule he could not go. pic.twitter.com/fmNemyx1ZG
— Sreedhar Pillai (@sri50) June 30, 2022
துபாய் அரசின் பிளான் :
சமீப காலமாகவே துபாய் அரசு இந்திய நடிகர் நடிகைகளை தேர்வு செய்து , தங்கள் நாட்டின் உயரிய விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி , பார்த்திபன் , த்ரிஷா , மம்முட்டி , மோகன் லால், துல்கர் சல்மான் ,உள்ளிட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இதன் மூலம் துபாய் அரசு தங்கள் நாடுகளின் சுற்றுலா மேம்பாட்டை பெருக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கலை , மற்றும் பொழுது போக்கினை மேம்படுத்தும் வகையில் துபாயில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பை வேண்டுகிறது அந்நாட்டு அரசு . கலை சேவைகளை நடிகர்கள் வழங்குவது, துபாய் சுற்றுலா தளங்கள் குறித்தான பதிவுகளை ஷேர் செய்வதன் மூலம் தங்கள் நாட்டின் புகழ் சாமானியர்களை சென்றடையும் என துபாய் அரசு நம்புகிறது.
The UAE government presents #MakkalSelvan Mr. @VijaySethuOffl with a Golden Visa !!
— Sankarganesh_Lovepeace🇮🇳MNM (@SankarganeshLo1) March 4, 2022
This is called success once he went UAE 🇦🇪 for work n now he got a #GoldenVisa 👍💪 #Congratulations #VijaySethupathi pic.twitter.com/XhvuqZwmkd
கோல்டன் விசாவை யார் பெறலாம் :
கோல்டன் விசா ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசால் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள், கலை, அறிவியல், விளையாட்டுத் துறையில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படுகிறது. இந்த துறையில் திறமையானவர்கள் யாராக இருந்தாலும் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.