(Source: ECI/ABP News/ABP Majha)
Kamalhassan: நடிகர் சங்க கட்டடத்துக்கு ஒரு கோடி கொடுத்த கமல்ஹாசன்: பெற்றுக் கொண்ட கார்த்தி, விஷால்!
தென் இந்திய நடிகர் சங்கக் கட்டடப் பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் ரூ 1.கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்
முன்னதாக உதயநிதி ஒரு கோடி வழங்கியதைத் தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்கத்திற்கு நிதி வழங்கியுள்ளார்.
கமல்ஹாசன்
தென் இந்திய நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு ரூ.40 கோடி தேவைப்படும் என்று நடிகர் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தென் இந்திய திரைப் பிரபலங்கள் தங்கள் பங்குக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டப் பணிகளுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாலர் கார்த்தி உள்ளிட்டவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்கக் கட்டடத்திற்கு நிதி வழங்கியுள்ளார்.
ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார் கமல்
நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார் நடிகர் கமல்ஹாசன் #Kamalhassan #ActorsAssociation #Karthi #Vishal #CinemaNews pic.twitter.com/dI3ruYKHfd
— Diamond Babu (@idiamondbabu) March 9, 2024
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர், மூத்த நடிகர் கமல்ஹாசன் இன்று (09.03.24) அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் நடிகர் சங்கக் கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை தொடர இருக்குறார். இது தவிர்த்து மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் இன்று கலந்து பேசியதில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதெனவும், வரும் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்த்த அந்த கட்சி தொண்டர்களுக்கும், கமல்ஹாசனின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும், மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும் கூறினார்.
மேலும் படிக்க : Kavin: அடுத்த சிம்புவாக மாறுகிறாரா கவின்? ஷூட்டிங்குக்கு நேரத்துக்கு வருவதில்லை எனக் கிளம்பிய குற்றச்சாட்டு!