மேலும் அறிய

கலையாகப் பாருங்கள்...கேலி செய்யப்பட்ட கமல்ஹாசனின் பிக் பாஸ் காஸ்டியூம்... ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா விளக்கம்!

பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் ஆடையின் மேல் பெயிண்ட் ஊற்றியபடியும் கறை படிந்தது போல் இருப்பதாகக் கூறி மீம்ஸ் பகிர்ந்து தள்ளினர் இணையவாசிகள்!

உலகம் முழுவதும் சுமார் 30 பில்லியன் மக்கள் வரை பார்த்து ரசிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே ஜன.22ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

வழக்கமாக ஒவ்வொரு பிக் பாஸ் சீசனின் போதும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், அவர்களுக்கிடையேயான முட்டல், மோதல் என மூன்று மாத காலத்துக்கு இந்நிகச்சி தொடர்பான அனைத்தும் பேசுபொருளாக இருக்கும்.

இவற்றின் மத்தியில் இந்த 6 சீசன்களாக பிக் பாஸ் ஆடியன்ஸ்களைக் கவர்ந்து க்யூட்டாக லைக்ஸ் அள்ளும் ஒரு விஷயம் தான் நடிகர் கமல்ஹாசனின் உடைகள்!

கலையாகப் பாருங்கள்...கேலி செய்யப்பட்ட கமல்ஹாசனின் பிக் பாஸ் காஸ்டியூம்... ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா விளக்கம்!

ஒவ்வொரு சீசனிலும் நடிகர் கமல்ஹாசனின் கண்கவர் காஸ்ட்யூம்களைக் காணவே வீக் எண்ட் எபிசோட்களைக் காணும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் விண்டேஜ் உடைகள் தொடங்கி பாந்தமான நம்ம ஊர் வேட்டி சட்டை வரை வீக் எண்ட் எபிசோட்களில் நடிகர் கமலின் உடைகள் ரசிகர்களைக் கொள்ளையடித்தன. இதற்கான பெருமை கமல் ஹாசனின் ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராமையே சேரும்.

இளைஞர்களுக்கு சவால் விடும் கூலான ஆடைகள், பொன்னிற பார்டர் வைத்த கருப்பு வேட்டி சட்டை, பிறந்தநாள் ஸ்பெஷல் உடை என கமலின் காஸ்ட்யூம்கள் அவரது ரசிகர்களைக் கவர்ந்தன.

ஆனால் இவற்றில் இருந்து மாறுபட்டு பிக் பாஸ் ஃபினாலேவில் கமல் அணிந்திருந்த உடை மட்டும் நெட்டிசன்களின் மத்தியில் கேலிக்கு ஆளானது.

சமூக வலைதளங்களில் படு வைரலான கமலின் கிராண்ட் ஃபினாலே உடை மீம் க்ரியேட்டர்களுக்கு தீனி போட்டு ட்ரோல்களை சம்பாதித்தது. குறிப்பாக ஆடையின் மேல் பெயிண்ட் ஊற்றியபடியும் கறை படிந்தது போலும் இருப்பதாகக் கூறி கேலி செய்யத் தொடங்கினர் நெட்டிசன்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் ரிசல்ட் தாண்டி கவனமீர்த்த கமலின் உடை குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராம் பேட்டியளித்துள்ளார்.

அதில், ”கமல் சார் டெனிம் ஆடை, ஜாக்கெட் மாதிரியான ஆடை வேண்டுமென்று கேட்டார். அதன்படி chaos எனும்  கலெக்‌ஷனில் இந்த ஆடை முழுக்க முழுக்க கைகளால் வடிவமைக்கப்பட்டது. ஆடை வடிவமைக்குப் பின் வட சென்னை பட கலை இயக்குனர் ஜாக்சனிடம் கொடுத்து இதுபோல் பெயிண்ட் செய்துதரக் கோரி வாங்கினேன்.

இந்த ஆடையைப் பார்த்ததுமே கமல் ரொம்ப நல்லா இருக்கு எனப் பாராட்டினார். சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளை நான் பார்ப்பதில்லை, அதற்கு நேரமும் இல்லை. கலையை கலையாகதான் பார்க்க வேண்டும். இந்த ஆடையை வேறு யாரையாவது வடிவமைக்க சொல்லுங்கள் பார்க்கலாம்...பெயிண்டை ஆடை மீது ஊற்றினால் அனைத்து இடங்களிலும் படும், நாம் அதை எப்படி செய்கிறோம் என்பது தான் கலை” எனத் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Amritharam (@amritha.ram)

மேலும் இத்தனை சீசன்களாக கமலுக்கு ஆடை வடிவமைக்கும் பயணம், மற்றும் தன் பாஸ் கமலுக்கு நன்றி தெரிவித்தும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அம்ரிதா.

சென்ற ஆண்டு  அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்  விக்ரமன்,ஷிவின், அஸிம் ஜிபி முத்து, அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி,ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,ஆயிஷா, ஷெரினா ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மைனா நந்தினி  என 21 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் அஸீம் டைட்டில் வின்னராகவும், விக்ரமன் இரண்டாமிடமும், ஷிவின் மூன்றாமிடமும் பிடித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Embed widget