Kamal Haasan Gift: பகலிரவாக பாடுபட்ட உதவி இயக்குநர்கள்... இலக்கை தொட ஆளுக்கு ஒரு அப்பாச்சி பைக்... கமல் கொடுத்த கிப்ட்!
விக்ரம் படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
'விக்ரம்' என்ற ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கமல்ஹாசன் நீண்ட நாட்களுக்கு பிறகு பவர் பேக்கான நடிப்பை வெளிப்படுத்தினார். இவரது நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அன்பளிப்பாக இந்த திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 175 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கமல்ஹாசன் தனது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்ஸஸ் காரைப் பரிசாக வழங்கியதுடன், அது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேங்க் யூ சோ மச் ஆண்டவரே" என்று பதிவிட்டுள்ளார்.
Thank you so much Aandavarey @ikamalhaasan 🙏🏻 ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022
மேலும், விக்ரம் படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
Also, #Ulaganayagan gifted 13 ADs of @Dir_Lokesh who worked in #Vikram TVS Apache RTR 160 Motor Bikes.. https://t.co/yzv6CpqIEI
— Ramesh Bala (@rameshlaus) June 7, 2022
இந்தநிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் காரை பரிசாக வழங்கியதை தொடர்ந்து, விக்ரம் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த 13 பேருக்கும் தலா ஒரு அப்பாச்சி ஆர்டிஆர் 160 மோட்டார் பைக்கை உலகநாயகன் பரிசாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்