Vikram | கமல்ஹாசனின் படத்திற்கு அனுமதி மறுப்பு ! - ஏமாற்றத்தில் படக்குழுவினர்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேறு லொக்கேஷனை தேர்வு செய்துக்கொள்ளலாம் விட்டுவிடுங்கள் என படப்பிடிப்பை தற்போது தள்ளி வைத்துள்ளாராம்.
தென்னிந்திய சினிமாவின் நடிப்பு அசுரர்களை ஒரே ஃபிரேமில் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விஜயை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பிறகும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார்.மேலும் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் வில்லனாக களமிறங்கவுள்ளதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
Absolute Bliss ✨@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @RKFI #Vikram#vikramsecondschedule pic.twitter.com/BVegxNoC86
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 25, 2021
இந்நிலையில் விக்ரம் படத்தின் முக்கிய காட்சிகளை எடுக்க தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் அனுமதி கேட்டுள்ளனர் படக்குழு. ஆனால் சென்னை காவல்துறையின் கொரோனா சூழல் காரணமாக , அரசு அறிவுறுத்தியுள்ள ஆணைகளின் அடிப்படையில் , பாதுகாப்பு நலன் கருதி அங்கு அனுமதியளித்த மறுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளார்களாம். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேறு லொக்கேஷனை தேர்வு செய்துக்கொள்ளலாம் விட்டுவிடுங்கள் என படப்பிடிப்பை தற்போது தள்ளி வைத்துள்ளாராம். அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் செட் வேலைகளை செய்து, அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்திக்கொள்கிறோம் என மொத்தம் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த படக்குழு அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Vikram second schedule wrapped ⚡@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @RKFI #Vikram #vikramsecondschedule pic.twitter.com/sjcAIwda8N
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 2, 2021
விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் காட்சிகள் பாதி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. படத்தில் அர்ஜூன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் , ஷிவானி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் நரேன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. பாலிவுட் நடிகர்களும் கூட படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெகுவாக பாராட்டியிருந்தனர். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் வெலியிட்ட ஷூட்டிங் புகைப்படங்களும் வைரலானது . குறிப்பாக கமல்ஹாசன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் 80 களில் நடித்த கமலை நினைவு கூறுவதாக அமைந்தது. படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.