மேலும் அறிய

Kalyani Priyadarshan: உள்ளங்களை கொள்ளை கொண்ட க்யூட் ஓமணப்பெண்.... கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாள்!

தான் முதன்முதலில் மாடலிங் செய்யப்போகிறேன் எனக் கூறியபோது தன்னை தன் நண்பர்கள் கேலி செய்ததாகவும், அதனையே உத்வேகமாக மாற்றி நடிப்பில் தான் கவனம் செலுத்தியதாகவும் கல்யாணி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இன்று (ஏப்ரல்.05) தனது பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மலையாளத்தில் தொடங்கி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களில் கடந்த சில ஆண்டுகளாக பிரபல நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன்.

மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான பிரியதர்ஷன் - மலையாள நடிகை, கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவருமான நடிகை லிசி ஆகியோரது மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

என்ன தான் மலையாள சினிமா பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் இவர் அறிமுகமானது ‘ஹலோ’ எனும் தெலுங்கு படத்தில். 2017ஆம் ஆண்டு ‘ஹலோ’  படத்தில் நாகார்ஜூன் மகன் அகில் ஜோடியாக அறிமுகமான கல்யாணி, தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’ படத்தில் 2019ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தன் தாய் வீடான மலையாளத்திலும் கால் பதித்து கவனம் செலுத்தத் தொடங்கிய கல்யாணி, சிம்புவுடன் இணைந்து நடித்த மாநாடு படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை சென்றடைந்தார். மேலும் 2022ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் க்யூட்டாக கவனமீர்த்த கல்யாணி, ஹ்ரிதயம், ப்ரோ டேடி, தல்லுமாலா என வெற்றிப் படங்களைக் கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தார்.

பி ஏ ஆர்க்கிடெக்சர் படித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், முதலில் சினிமா துறையில் ப்ரொடக்‌ஷன் டிசைனராக நுழைந்துள்ளார். தமிழில் இருமுகன், இந்தியில் க்ரிஷ் 3 படங்களில் பணிபுரிந்துள்ள இவருக்கு நடிப்பின் பக்கம் ஆர்வம் திரும்பியுள்ளது.

இந்திய சினிமாவின் வழக்கமான அழகியல் கோட்பாடுகளுக்குள் அடங்காத தோற்றத்துடன் இருந்த கல்யாணி, பின் நடிப்புத் துறையில் நுழைந்து, அதில் பொருந்தி, தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக கவனமீர்த்து வருகிறார்.

தான் முதன்முதலில் மாடலிங் செய்யப்போகிறேன் எனக் கூறியபோது தன்னை தன் நண்பர்கள் கேலி செய்ததாகவும், அதனையே உத்வேகமாக மாற்றி நடிப்பில் தான் கவனம் செலுத்தியதாகவும் கல்யாணி தன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

 மலையாளத்தில் மைக்கில் ஃபாத்திமா என்ற படத்தில் மட்டும் தற்போது நடித்து வரும் கல்யாணி மென்மேலும் தென்னிந்திய சினிமாவில் கோலோச்ச வாழ்த்துகள்!

 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Embed widget