மேலும் அறிய

Kalki 2898 AD: வரலாற்று வில்லன்களை சூப்பர் ஹீரோக்களாக மாற்றிய கல்கி - எதிர்பாராத டிவிஸ்ட் ஏராளம்! அப்படி என்ன வொர்த்?

Kalki 2898 AD: அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் நடிப்பில், கல்கி திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

Kalki 2898 AD: பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கல்கி திரைப்படத்தை, திரையரங்கில் பார்க்க வேண்டியது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

கல்கி திரைப்படம்:

இந்தியாவின் புனித இதிகாசங்களாக கருதப்படும் மகாபாரதம் மற்றும் ராமயாணத்தை அடிப்படைகாக கொண்டு, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் என ஏராளமானவை வெளியாகியுள்ளன. அவை அனைத்துமே ஒரே கதையை மட்டுமே, வெவ்வேறு கோணங்களில் கூறி வந்தன. அந்த வரிசையில் கல்கி திரைப்படமும் மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட ஒரு கதைக்களத்தை கொண்டுள்ளது. குருக்‌ஷேத்ரா போரின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே எடுத்துக்கொண்டு இந்த பிரமாண்ட திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால், கல்கி திரைப்படத்தை கட்டாயம் ஏன்  திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் என்பதற்கான சில காரணங்களை இங்கே விவரித்துள்ளோம். படம் பார்க்காதவர்கள் ஸ்பாய்லர்கள் வேண்டாம் என கருதினால், இத்தோடு இந்த செய்தியை தவிர்ப்பது நல்லது.

நுட்பமான கதை:

இந்தியாவில் மகாபாரத கதையை அறியாதோரும், அதில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி விவாதிக்காத நபர்களும் மிகக்குறைவே. அதில் கூறப்பட்டதை போன்று விஷ்ணுவின் கடைசி மற்றும் பத்தாவது அவதாரமான கல்கி தோன்றுவது,  மகாபாரதத்தில் இடம்பெற்ற சில முக்கிய கதாபத்திரங்களின் நீட்சி மற்றும் எதிர்கால பேரழிவு ஆகியவற்றை இணைத்து, இந்த கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய ரசிகர்களை நிச்சயம் இந்த கதைக்களம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. 

வில்லன்களை ஹீரோக்களாக மாற்றிய கல்கி:

அஸ்வத்தாமன் கதாபாத்திரம், வயிற்றில் உள்ள ஒரு சிசுவையே கொல்ல முயன்றதால் மரணமே இல்லை என்ற சாபத்தை பெற்றார் எனக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் இடம்பெற்ற  முக்கிய வில்லன்களில் ஒருவராக கருதப்படும் அவர் இன்றளவும் நம்மிடையே வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் அவருக்கான சாப விமோச்சனம் என்னவாக இருக்கும், அவர் எந்த அளவிற்கு வலிமையானவர் என்பதை காட்டி, விஷ்ணு அவதாரத்தையே காக்கும் பொறுப்பை  வழங்கி, கல்கி கதையின் மிக முக்கிய நாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.

மறுமுனையில் பெரு வள்ளலான கர்ணனும், துரியோதனன் பக்கம் இருந்ததால் வில்லனாகவே பார்க்கப்படுகிறார். ஆனாலும்,  அவருக்கு நேர்ந்த மரணம் மகாபாரதம் படித்தவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கலாமே,  மன்னிக்கப்பட்டு இருக்கலாமே என எண்ணியோர் பலர். இந்நிலையில் தான், கர்ணனுக்கான சரியான அங்கீகாரம் கல்கி படத்தில் வழங்கப்பட்டுள்ளது. புராணக்கதையில் முக்கிய வில்லன்களாக இருந்த கர்ணன் மற்றும் அஸ்வத்தாமன் கதாபாத்திரங்கள், கல்கி படத்தில் சூப்பர் ஹீரோக்களாக மாற்றப்பட்டுள்ளது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பதே உண்மை.

தொழில்நுட்ப ரீதியில் வலுவான படம்:

முதலில் இப்படிப்பட்ட கதைக்களத்தை கொண்ட படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். 600 கோடி ரூபாய் செலவில் அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ், தீபிகா படுகோனே பெரும் நட்சத்திரங்களை இணைத்து இந்த படம் உருவாகி உள்ளது. ஆதிபுருஷ் போன்ற படங்கள், கிராபிக்ஸ் போன்றவற்றிற்காக கடுமயாக விமர்சிக்கப்பட்டன. ஆனால், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தியாவிலும் படங்களை எடுக்க முடியும் என, கல்கி பட இயக்குனர் நாக் அஷ்வின் நிரூபித்துள்ளார். படத்தின் ப்ரோடக்‌ஷன் டிசைனர் நிதின் ஜிகானி மற்றும் ஒளிப்பதிவாளர் Djordje Stojiljkovic இருவரும் தங்கள் அசாத்திய உழைப்பால் இயக்குனரின் கனவுகளுக்கு உயிர் அளித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாகவும் நம்பும்படியாகவும் திரையில் காட்சிப்படுத்தப்பட்டுளன. பிரமாண்ட சிலைகள், பறக்கும் வாகனங்கள், கோட்டைகள், வறண்ட பூமி ஆகியவை, பேரழிவுக்குப் பிறகு பூமி இப்படி தான் இருக்கும்போல என்ற எண்ணத்தை நமக்கே தருகிறது.

பன்முகத்தன்மை:

ஹாலிவுட்டில் பல படங்களில் பேரழிவிற்கு பிறகான உலகத்தை காட்டி இருப்பார்கள். பெரும்பாலும் அதில் வெள்ளையர்கள் மட்டுமே தப்பி பிழைத்து வாழ்வதாக காட்டப்பட்டு இருக்கும். ஆனால், பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை கதைக்களமாக கொண்டிருக்கும்போது, அது எளிதானதல்ல. அதனை உணர்ந்த இயக்குனர் தமிழர்கள், தெலுங்கர்கள், பஞ்சாப் மக்கள், வடநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என பலரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்வதை போன்று வடிவமைத்துள்ளார். இந்த முயற்சி இந்தியாவின் பன்முகத்தன்மை கதைக்களத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. இதற்கான கலாச்சார பிரதிபலிப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகியவற்றிற்காக, படக்குழுவின் மெனக்கெடல் பாராட்டுதலுக்குரியதே.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
Embed widget