Kalki 2898 AD: கல்கி தயாரிப்பாளர் காலில் விழுந்த அமிதாப் பச்சன்! கை தட்டிய கமல்ஹாசன் - என்னாச்சு?
Kalki 2898 AD Pre release Event: கல்கி 2898 படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப் பச்சன் கல்கி படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் காலில் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்கி 2898 AD ( Kalki 2898 AD)
வைஜயந்தி மூவீஸ் சார்பாக அஸ்வினி தத் தயாரித்து இயக்குநர் நாக் அஸ்வினின் கனவுப் படமாக உருவாகியிருக்கிறது கல்கி 2898. புராணக்கதையை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பிரபாஸ் , அமிதாப் பச்சன், தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , திஷா பதானி , அனா பென் , ஷோபனா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வரும் ஜூன் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ஜூன் 20 ஆம் தேதி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படூகோனே, பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் மூத்த பாலிவுட் நடிகர் கல்கி படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் காலில் விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலில் விழும் அளவிற்கு அப்படி என்ன மரியாதை என பலரும் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அமிதாப் பச்சன் அஸ்வினி தத் காலில் விழுந்ததன் காரணம் இதுதான்.
அஸ்வின் தத் காலில் விழுந்த அமிதாப் பச்சன்
View this post on Instagram
கல்கி படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் அமிதாப் பச்சன் மேடையில் பகிர்ந்துகொண்டார் . அப்போது அவர் தயாரிப்பாளர் அஸ்வினி தத் குறித்து பேசினார் " அஸ்வினி தத் மற்றும் அவரது இரு மகள்கள் ஸ்வப்னா மற்றும் பிரியங்க தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள். என் வாழ்நாளில் இவரைப் போல் ஒரு எளிமையான பண்புள்ள மனிதரை பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் செட்டிற்கு முதலில் வந்து சேர்பவர் இவர்தான். விமான நிலையத்தில் உங்களை முதலில் வரவேற்பவர் இவர் தான். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்பதை எப்போதும் உறுதிபடுத்திக் கொண்டே இருப்பார். இப்படி எல்லாம் யாருமே யோசிப்பது இல்லை." என்று பேசிக்கொண்டிருந்த அமிதாப் பச்சன் திடீரென்று அஸ்வினி தத் காலில் விழுந்தார். பதிலுக்கு அஸ்வினி தத் அமிதாப் பச்சன் காலில் விழவே இந்த நிகழ்வு பலரை நெகிழ்ச்சி அடையச் செய்தது" இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அமிதாப் பச்சனின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அப்போது, அருகில் இருந்த நடிகர் கமல்ஹாசன் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின்போது கை தட்டினார்.