Sivakarthikeyan: ‛இரண்டு முறை சிவகார்த்திகேயன்ட்ட கேட்டேன்.. உதவி பண்ணல’ -காதல் கண்ணன் வருத்தம்..!
சிவகார்த்திகேயனிடம் இரண்டு முறை நடிக்க வாய்ப்பு கேட்டும் உதவ வில்லை என நடிகர் காதல் கண்ணன் பேசியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனிடம் இரண்டு முறை நடிக்க வாய்ப்பு கேட்டும் உதவ வில்லை என நடிகர் காதல் கண்ணன் பேசியிருக்கிறார்.
இது குறித்து நக்கீரன் யூடியூப் தளத்தில் பேசியிருக்கும் கண்ணன், “ நான் எதையும் ஸ்ட்ரைட் ஃபார்வர்டாக சொல்லி பழக்கப்பட்டவன். நான் யாரையும் அண்ணன் கூட கூப்பிட மாட்டேன். சிவகார்த்திகேயன் எனக்கு சொந்தம்தான். வருஷா வருஷாம் நியூ இயருக்கு மீட் பண்ணுவோம். அப்போ அவர் ரெமோ முடிச்சிட்டு, ரவிக்குமார் இயக்கத்துல நடிக்கிறதா இருந்துச்சு. அப்ப நான் அவர்கிட்ட வாய்ப்பு கேட்டேன். அவர் உடனே நிச்சயமா சொல்றேன்னு சொல்லி இருந்தாரு.
அவரு நினைச்சு செஞ்சாதான் உண்டு. ரெண்டு தடவை கேட்டேன். போன் பண்ணி கேட்டேன். அதுக்கப்புறம் அவர ஃபோர்ஸ் பண்ணி கேட்டா நல்லா இருக்காது. சில பேரு சினிமாவுல வெற்றியை தொட்டதுக்கு அப்புறமா கூப்பிடுறோம்னு நினைச்சிக்கிறாங்க. அதனால அத பத்தி நம்ம கோச்சிக்க முடியாது. அவரோட திறமையில அவர் வந்தவரு. நான் இன்னைக்கு ஒரு சப்போர்ட்டிங் ஆக்டரா இருக்கேன். எனக்கு கொஞ்சம் ஃபேம் இருக்கு. இது நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தது. ஆனா இன்னும் சினிமாவுல போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அந்த தூரத்த கடக்கும் போது என்ன அவருக்கு நியாபகம் வரும்.. தெரியும்.. அப்ப அவர் என்ன கூப்பிடலாம்.” என்று பேசியிருக்கிறார்.
View this post on Instagram
பரத் நடித்த காதல் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் கண்ணன். இயக்குநர் ஆக வேண்டுமென ஆசையோடு வந்தவருக்கு சினிமா துணை நடிகர் வாய்ப்பை வழங்கியது. தொடர்ந்து கோ, 100, சர்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரும், நடிகர் சிவகார்த்திகேயனும் இவருக்கு சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்