(Source: ECI/ABP News/ABP Majha)
நிறைமாத நிலவே வா வா...9 மாசம் முடிஞ்சிடுச்சி... இணையத்தில் வைரலாகும் ஜான் கொக்கன் - பூஜா தம்பதி!
பீச்சில் ரம்மியமாக இவர்கள் எடுத்து பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு லைக்ஸ் அள்ளி வருகின்றன.
நடிகர் ஜான் கொக்கன் - அவரது மனைவி பூஜா ராமச்சந்திரன் இருவரது கர்ப்ப கால புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகின்றன.
சார்பட்டா பரம்பரை, துணிவு படங்களில் வில்லனாக நடித்து கவனமீர்த்தவர் மலையாள நடிகர் ஜான் கொக்கன்.
இவருக்கும் தமிழில் பிரபல விஜேவாக இருந்து பின் நடிகையாக உருவெடுத்த பூஜா ராமச்சந்திரனுக்கும் 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பீட்சா, காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பூஜா நடித்துள்ளார்.
முன்னதாக தன் சக தொகுப்பாளர் க்ரெய்க்கை கடந்த 2010ஆம் ஆண்டு பூஜா காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். அதன் பின் 2017ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கனை பூஜா திருமணம் செய்துகொண்டார்.
இதேபோல் ஜான் கொக்கனும் பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவனைத் திருமணம் செய்து 2018ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்திருந்தார்.
இச்சூழலில் இவர்கள் இருவருக்கும் இந்தத் திருமணம் இரண்டாவது திருமணமாகும். 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி தொடர்ந்து தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களின் விருப்பமான இணையதள ஜோடிக்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
முன்னதாக சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் பாடி பில்ட் அப் செய்து நடித்து பாக்ஸராகக் கலக்கி ஜான் கொக்கன் தனி கவனம் ஈர்த்தார்.
இந்தக் கதாபாத்திரத்துக்குப் பின் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து லைக்ஸ் அள்ளினார்.
இதனிடையே பூஜா கருவுற்ற நிலையில், இந்தத் தகவலை இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். முன்னதாக பூஜாவின் வளைகாப்பு புகைப்படங்களும் இன்ஸ்டாவில் பகிரப்பட்டு லைக்ஸ் அள்ளின.
அந்த வகையில் தற்போது ஜான் கொக்கன் - பூஜா இருவரும் பகிர்ந்துள்ள கர்ப்பகால கப்பிள் ஃபோட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீச்சில் ரம்மியமாக இவர்கள் எடுத்து பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு லைக்ஸ் அள்ளி வருகின்றன.
View this post on Instagram
தற்போது பூஜாவுக்கு 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், விரைவில் பிறக்கப்போகும் தங்கள் குழந்தைக்காகவும், புதிய உலகுக்காகவும் காத்திருப்பதாகவும் பூஜா மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.