மேலும் அறிய

Jawan Box Office: "இது வெறும் ஆரம்பம்தான்.." வரலாறு காணாத சாதனை படைக்கும் ஜவான்.. ஆனந்தத்தில் அட்லீ..!

Jawan Box office : ஜவான் திரைப்படத்தின் ஒரே நாள் வசூலில் வரலாறு காணாத சாதனையை படைத்தது அமர்களப்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான அட்லீ பாலிவுட் சினிமாவில் 'ஜவான்' திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகி பாபு, சஞ்சய் தத், பிரியா மணி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான 'ஜவான்' திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி உலகெங்கிலும் 10 ஆயிரத்துக்கும் மேலான திரையரங்குகளில் வெளியானது. அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்து வெளியான நாள் முதல் ட்ரெண்ட்டிங் லிஸ்டில் கலக்கி வருகிறது. இப்படம் மூலம் நடிகை நயன்தாராவும் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Jawan Box Office:

ஜவான் கலெக்‌ஷன்:

படத்தின் ரிலீசுக்கு முன்னர் வெளியான ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்துமே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீசுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. வரலாறு காணாத அளவுக்கு டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைத்த 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரைவிருந்தாக அமைந்தது. 

வெளியான முதல் நாள் முதல் வசூல் வேட்டையை துவங்கிய ஜவான் திரைப்படம் ஒரு நாள் வசூல் விகிதத்திலும் வரலாறு படைத்துள்ளது. வெளியான முதல் நாளே ரூ.129 கோடி வசூலித்த ஜவான் திரைப்படம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூல் விகிதத்தின் அடிப்படையில் ஏறு முகம் கண்டு வருகிறது.  தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனங்களையும், பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ள ஜவான் திரைப்படத்தின் ஹிந்தி வர்ஷனில் ஒரு நாள் வசூல் 68.72 கோடியை எட்டியுள்ளது. அதே போல உலகளவில் ஒரு நாள் வசூலாக 144.22 கோடி வசூலித்து இதுவரையில் எந்த படமும் செய்யாத மாபெரும் சாதனையை படைத்துள்ளது. 

மேலும் உலகளவில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மூன்று நாட்களில் மொத்தமாக 384.69 கோடி பாக்ஸ் ஆபிசில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது வெறும் ஆரம்பம்:

இந்த சந்தோஷமான அறிவிப்பை ஜவான் படத்தின் இயக்குநர் அட்லீ தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். "ஜவான் வரலாறு படைத்தது. இது ஆரம்பம் மட்டுமே!" என சந்தோஷத்தின் களிப்பில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.  வார இறுதி நாட்கள் என்பதால் இந்த வசூல் விகிதம் மேலும் அதிகரிக்ககூடும் என திடமாக நம்புகிறார்கள் படக்குழுவினர்.  

மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் வரலாறு காணாத சாதனை படைத்து வரும் ஜவான் படத்தின் வெற்றியை சோசியல் மீடியா எங்கும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள் திரை ரசிகர்கள். பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ள ஜவான் திரைப்படம் இயக்குநர் அட்லீக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்துள்ளது.  

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget