மேலும் அறிய

Janaki Devi : விஜயா சோறு போடப் போறாரான்னு கேட்டாங்க.. அப்படிதான் நடந்துச்சு.. நெகிழ்ந்த ஜானகி தேவி

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை தொடர்களில் அசத்தி வருபவர் தான் நடிகை ஜானகிதேவி. இவர் காவலன், ரம்மி, சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை தொடர்களில் அசத்தி வருபவர் தான் நடிகை ஜானகிதேவி. இவர் காவலன், ரம்மி, சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களிலும் அசத்துகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், நான் நடிகர் விஜய்யின் மிகப்பெரிய விசிறி. டை ஹார்ட் ஃபேன் என்று சொல்லலாம். என் ஸ்கூல் டேஸ்ல என் நோட்புக் ஃபுல்லா விஜய் சார் படம்தான் இருக்கும். எங்க அம்மா என்னைத் திட்டுவாங்க. விஜய்தான் உனக்கு சோறு போடப்போறாரான்னு கேட்பாங்க. அம்மா அடிக்கக்கூட செஞ்சிருக்காங்க. அப்புறம் நான் நடிக்க வந்தேன். சின்னச் சின்ன கேரக்டர் செய்துகிட்டு இருந்தேன். அப்போ எனக்கு ரொம்ப கோபம் வரும். ஒரு நாள் விஜய் பட சூட்டிங் நடக்குதுன்னு சொன்னாங்க. நானும் பார்க்கப் போயிருந்தேன். அப்போ விஜய் சாரின் மேக்கப் மேன் அறிமுகமானார். அவர் நீ படத்தில் நடிக்கிறியாமா என்று கேட்டார். எனக்கு ஒரே ஆச்சர்யம். சரி சார்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

3 நாள் கழிச்சி ஃபோன் வந்துச்சு. காரைக்குடியில் சூட்டிங் வாங்கன்னு சொன்னாங்க. நானும் போனேன். அப்படித்தான் எனக்கு காவலன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அன்னிக்கு ஃபுல்லா ஸ்பாட்டில் விஜய் சார வச்ச கண்ணு வாங்காம பார்த்தேன். அவரிடம் ஹை சார் சொன்னதே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. நான் அன்னிக்கு சாப்பிடக்கூட இல்லை. அந்தப் படத்தில் நடித்து முடித்து சம்பளம் வாங்கியதும் எங்க அம்மா கிட்ட அதை கொண்டுபோய் கொடுத்தேன். விஜய் சோறு போடுவாரான்னு கேட்டீங்க.. இன்னிக்கு விஜய் சார் படத்துல நடிச்சு சம்பளம் வாங்கிட்டேன் என்றேன். அம்மாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அம்மாவும் என்ன வாழ்த்தினாங்க என்று ரசித்துக் கூறியிருந்தார்.

நடிகை ஜானகியின் இந்த ஃப்ளாஷ்பேக் பேட்டி இப்போது வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.


Janaki Devi : விஜயா சோறு போடப் போறாரான்னு கேட்டாங்க.. அப்படிதான் நடந்துச்சு.. நெகிழ்ந்த ஜானகி தேவி

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றும் கவனம் பெற்றது. அதில் காஸ்டிங் கவுச் எனச் சொல்லப்படும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.  "சினிமாவில் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இல்லை. சாதாரணமாக எங்கு சென்றாலும் எல்லா தொழில்களிலுமே இது மாதிரியான கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு தெரியும், தன்னோடு பழகும் ஆண் எந்த நோக்கத்தில் பழகுகிறார் என்பது. நமக்கு அது பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட வேண்டும். மேலும், எல்லா இடங்களிலும் இதுபோன்ற நடப்பதில்லை. வக்கிரமான புத்தியோடு இருப்பவர்கள்  சிலர்தான் இதுபோன்ற நடக்கிறார்கள்.

மேலும் தனக்கு தெரிந்த ஒரு பெண் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இன்ஸ்டாகிராமில் அவரை பலர் பின்தொடர்கின்றனர். அவருக்கு வந்த மெசேஜ்களை பார்த்தால் மிகவும் மோசமாக உள்ளது. சினிமா வாய்ப்பு வேண்டுமென்றால் வந்து மீட் பண்ண வேண்டும் என கூறியுள்ளனர். இதுபோன்ற தவறான அணுகுமுறையை பிரபலமான நடிகைகளிடம் காட்டமுடியாது. சின்ன நடிகைகள் என்றால் இப்படியெல்லாம் சலுகையை எடுத்துக் கொள்கின்றனர்" எனக் கூறியிருந்தார்.

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
Embed widget