Jailer Update: செம்ம மாஸ்.. வெளியானது ஜெயிலர் படத்தின் எக்ஸ்க்லூசிவ் ஸ்டில்..
"ஜெயிலர்" செட்டிலிருந்து புனீத் ராஜ்குமார் சகோதரர் சிவ ராஜ்குமாரின் எக்ஸ்க்லூசிவ் ஸ்டில் வெளியாகியுள்ளது!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.
View this post on Instagram
முன்னதாக படம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ஆகஸ்ட் 15 அல்லது 22 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அப்டேட்டை தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி கடலூர், சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூர் என படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
50 சதவீத படப்பிடிப்பு ஓவர்!
தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கடலூர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்வித்தன. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read | பாலின சமத்துவத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்றம்.. 32 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு
ஜெயிலர் பட ரிலீஸ் தேதி:
‘டாக்டர்’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை . இதனையடுத்து பெரும் விமர்சனத்துக்கு ஆளானார் நெல்சன். பீஸ்ட் படம் வெளியாவதற்கு ஜெயிலர் படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ரஜினியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா நெல்சன் என ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் "ஜெயிலர்" செட்டிலிருந்து புனீத் ராஜ்குமார் சகோதரர் சிவ ராஜ்குமாரின் எக்ஸ்க்லூசிவ் ஸ்டிலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
Dr.Shiva Rajkumar from the sets of #Jailer 🔥@rajinikanth @NimmaShivanna @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/fLb9KRBRF0
— Sun Pictures (@sunpictures) November 17, 2022
இப்படம் நடிகர் ரஜினிகாந்தை பெரிதும் திருப்திபடுத்தியுள்ளதாகவும், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

