Jailer Cast: ரஜினியின் ஜெயிலர் படத்தில் இத்தனை நடிகர்களா? - வெளியான மாஸ் அப்டேட்
Jailer Cast Update: கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ரஜினி நடிக்கவுள்ள ஜெயிலர்(Jailer) படத்தின் யார் யார் நடிக்கவுள்ளா என்ற தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ஜெயிலர். கடந்தாண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் வெளியானது. இதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியிருந்தது. இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே ரஜினியும் நெல்சனும் இணையும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.
View this post on Instagram
ஆனால் பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனுடன் இணைவதை ரஜினி கைவிட்டு விட்டார் என தகவல் வெளியானது. அதெல்லாம் இல்லை என அளவுக்கு படத்திற்கு “ஜெயிலர்” என பெயர் தேர்வு செய்யப்பட்டு முன்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
View this post on Instagram
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதேபோல் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.