`முட் முட் கே’ - வைரலாகப் பரவும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ள மியூசிக் வீடியோ!
இத்தாலிய நடிகர் மிஷெல் மோர்ரோனுடன் இணைந்து பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உருவாக்கியுள்ள புதிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
இத்தாலிய நடிகர் மிஷெல் மோர்ரோனுடன் இணைந்து பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உருவாக்கியுள்ள புதிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
`முட் முட் கே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் வீடியோ இணையத்தில் வெளியானவுடன் பல ரசிகர்களும் இது குறித்து கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர். எனினும், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மிஷெல் மோர்ரோன் ஆகியோரின் உடைகள் பெரிதும் பிரபலம் ஆகியுள்ளன. இந்நிலையில், இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது அணிந்திருந்த இந்த உடைகளுடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இருக்கும் படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளர் சாந்தினி வாபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 13 அன்று ஜாக்குலின் பெர்னாண்டஸ், மிஷெல் மோர்ரோன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரங்களில் ரசிகர்களின் அன்பை இந்தப் பதிவு பெற்றுள்ளது. பலரும் கமெண்ட்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸின் உடையைப் பாராட்டியுள்ளனர்.
View this post on Instagram
`முட் முட் கே’ பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை உடன்பிறந்தப் பாடகர்களான நேஹா கக்கர், டோனி கக்கர் ஆகியோர் பாடியுள்ளதோடு, இதன் வீடியோவிலும் இடம்பெற்றுள்ளனர்.
View this post on Instagram