Yuvanshankar Raja | இசைஞானியின் 'இளையராஜா' யுவன்ஷங்கர் ராஜாவின் பெஸ்ட் பாடல்கள்..!
இளையராஜாவின் இளையமகன் யுவன்சங்க ராஜா நாளை தன்னுடைய 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்சங்கர் ராஜா. இவர் தனது 16 வயதில் இசையமைப்பாளராக திரை இசை பயணத்தை தொடங்கினார். முதல் சில படங்கள் சரியாக அமையவில்லை. அத்துடன் இவர் இசை மீது பல விமர்சனங்களும் எழுந்தது. எனினும் 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு தீனா,நந்தா,காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களில் இவரின் இசை மிகவும் சிறப்பாக அமைந்தது. அதன்பின்பு இவருடைய இசை மீது எழுந்த விமர்சனங்கள் குறைய தொடங்கின. இவரின் பல படங்களின் பாடல்கள் மெகா ஹிட் அடித்தன. நாளை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தன்னுடைய 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் இரவு நேரத்தில் கேட்க கூடிய சில யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் என்னென்ன?
1. முன்பனியா முதல் மழையா:
நந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். இந்தப் பாடலில் யுவன்சங்கர் ராஜாவின் இசை மற்றும் எஸ்பிபியின் குரல் சிறப்பாக அமைந்திருக்கும். மேலும் இப்பாடலின் வரிகளும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். குறிப்பாக,
"என் இதயத்தை
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்துவிட்டேன்
உன் விழியினில் உன்
விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து
விட்டேன் இதுவரை
எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன்
புன்னகையில் வாழ்கிறேன்
நான் உன் மூச்சிலே.. "
2. காதல் வைத்து:
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை விஜய் யேசுதாஸ் பாடியிருப்பார். அவரின் குரலில் யுவன்சங்கர் ராஜாவின் இசையும் அவ்வளவு அழகாக அமைந்திருக்கும்.
"தேவதை கதை
கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நோில் உன்னையே பாா்த்த
பின்பு நான் நம்பி விட்டேன்
மறுக்கவில்லை அதிகாலை
விடிவதெல்லாம் உன்னை
பாா்க்கும் மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்.."
3. துளி துளி மழையாய்:
கார்த்திக் நடிப்பில் வெளியான பையா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதை ஹரிசரண் பாடியிருப்பார். இந்தப் பாடல் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசையை பாடலுக்கு மேலும் வலு சேர்த்திருக்கும்.
"சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்..."
4. அன்பே பேரன்பே:
சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் சித் ஶ்ரீராம் ஆகியோர் பாடியிருப்பார்கள். பாடலின் வரிகள் மற்றும் யுவனின் இசை இந்த இரண்டும் நம்மை அப்படி உருக வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
"ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்.."
5. ஆராரிராரோ:
தமிழ் திரையுலகில் வெளியாகிய அம்மா பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பந்தத்தை இந்தப் பாடல் அவ்வளவு அழகாக வெளி கொண்டு வந்து இருக்கும். இந்தப் பாடலிலும் யுவன்சங்கர் ராஜாவின் இசை கூடுதல் அழகாக இருக்கும். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ராம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். கே.ஜே.யேசுதாஸ் குரலில் அம்மா என்று அழைக்காதே பாடலுக்கு பிறகு வந்த மற்றொரு சிறப்பான அம்மா பாடல் இது.
"வோ் இல்லாத
மரம்போல் என்னை நீ
பூமியில் நட்டாயே ஊா்
கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிா் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்.."
இவ்வாறு தமிழ் சினிமாவில் பல எண்ணற்ற ஹிட் பாடல்களை அழித்து கொண்டு வருபவர் யுவன்சங்கர் ராஜா. இவருடைய பாடல்களை அடுக்க ஒரு நாள் போதாது.
மேலும் படிக்க:"ஷூட்டிங் செட்ல ஹர்பஜன் சிங் எப்பவுமே இதைத்தான் செய்வார்” - சீக்ரெட் சொன்ன லாஸ்லியா