Madharaasi : கேக் வெட்டி கொண்டாடிய மதராஸி படக்குழு...எங்கப்பா தயாரிப்பாளர் ? போட்ட பணம் கிடைச்சதா?
சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் உலகளவில் ரூ 100 கோடி வசூலித்ததைத் தொடர்ந்து படத்தின் வெற்றியை கேட் வெட்டி கொண்டாடினர் படக்குவினர்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , பிஜூ மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற மதராஸி திரைப்படம் உலகளவில் ரூ 100 கோடி வசூலித்துள்ள நிலையில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். ஆனால் இந்த கொண்டாட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலந்துகொண்டது மதராஸி படம் நிஜமாகவே ஹிட் படமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மதராஸி படம் தயாரிப்பாளருக்கு வெற்றியா ? தோல்வியா ?
மதராஸி திரைப்படம் ரூ 150 கோடி பட்ஜெட்டில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 கோடிக்கும் மேல் படம் உலகளவில் வசூல் செய்தால் மட்டுமே படத்தின் விநியோகஸ்தர்களுக்கு லாபம். ஆனால் மதராஸி உலகளவில் இதுவரை ரூ 100 கோடி வசூலை எட்டியுள்ளது. டான் , டாக்டர் , அமரன் , மதராஸி என சிவகார்த்திகேயன் நடித்த 4 படங்கள் 100 கோடி வசூலீட்டிய படங்களின் பட்டியலில் இணைந்துள்ளன.
மதராஸி 200 கோடி வசூலீட்டுவதற்கான சாத்தியங்கள் மிக குறைவு என்பதால் இப்படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றி பின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிட்டது. படத்தின் தயாரிப்பாளரைப் பொறுத்தவரை மதராஸி படம் லாபமான படமே. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை ரூ 60 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. சாட்டலைட் உரிமை ஜீ தொலைக்காட்சிக்கு ரூ 26 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் படத்தின் வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயன் படங்கள் மீது கமர்சியல் ரீதியாக பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் அமரன் வெற்றியுடன் ஒப்பிட்டால் மதராஸி வசூல் ரொம்பவும் பின் தங்கியுள்ளது.
#Madharaasi party!
— FridayCinema (@FridayCinemaOrg) September 23, 2025
Where is the producer ?! pic.twitter.com/SLR3pn5uoC
மதராஸி ஓடிடி ரிலீஸ்
மதராஸி திரைப்படம் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடி படத்திலும் படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.





















