(Source: ECI/ABP News/ABP Majha)
Maniratnam: பொன்னியின் செல்வன் ஏன் பாகுபலி போல் இல்லை? - மணிரத்னம் பளீச் பேட்டி!
'பொன்னியின் செல்வன்’ பாகுபலி படம் போல ஏன் இல்லை என்பதற்கு இயக்குநர் மணிரத்னம் பேசியிருக்கிறார்.
'பொன்னியின் செல்வன்’ பாகுபலி படம் போல ஏன் இல்லை என்பதற்கு இயக்குநர் மணிரத்னம் பேசியிருக்கிறார்.
இது குறித்து மணிரத்னம் பேசும் போது, “ ராஜராஜ சோழன் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசராக இருந்தவர். அவர் பற்றி எடுக்கும் போது நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். அதே போல அதனுடன் பயணிக்கும் கேரக்டர்களும் உண்மையாக இருக்க வேண்டும். இந்தக்கதை வந்தியத்தேவன் வழியாக வரும். அவன் கண்வழியாகத்தான் நாம் கதையை பார்க்கிறோம்.
அதனால் இது ஒரு யதார்த்தமான படைப்பு. அதனால் இதில் பாகுபலி போல அதித கற்பனை சார்ந்த காட்சிகள் இருக்காது. சூப்பர் ஹீரோக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் இதில் எல்லாமே ரியலிஸ்ட்டிக்கா இருக்கும். பாடல்கள், இடங்கள் எல்லாமே அப்படித்தான் இருக்கும். அதனால் பாகுபலி, பொன்னியின் செல்வன் ஆகிய இருபடங்களும் வெவ்வேறு ஜானர்கள் கொண்டவை.
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
ஆனால் டீசர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து 'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது. இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து படத்தை பிரோமோட் செய்யும் வகையில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் என பல இடங்களுக்கு சென்றனர்.
View this post on Instagram
இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே படம் வெளியானது. ஒரு சிலருக்கு படம் பிடிக்கவில்லை என்றாலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தது.