மேலும் அறிய

Love Horoscope Today : வெறித்தனமா ஒன் சைடு லவ்வுல மூழ்கி இருக்கீங்களா நண்பா! அப்படினா, ஜாலியா படிங்க லவ் ராசிபலன்கள்!

Love Horoscope Today in Tamil, September 28th 2022: வெறித்தனமா ஒன் சைடு லவ்வுல மூழ்கி இருக்கக்கூடிய நபரா நீங்கள், அப்படினா, இந்த லவ் ராசிபலன்களை ஜாலியா படிங்க பாஸ்.

சமீபத்துல ரிலீசாகி நல்லாவே ஹிட்டான படம் திருச்சிற்றம்பலம். நண்பர்களா இருந்து  வாழ்க்கை துணையா மாறக்கூடிய இரண்டு பேருடய கதை. இங்க இருக்கிற ஐம்பது சதவிகித காதல் ஜோடிகளை முதலில் அறிமுகம் ஆவதே நண்பர்களாகத்தான். இந்த படத்த பாத்துட்டு ஒரு சிலர் நட்புல எங்க இருந்துங்க லவ் வந்துச்சுனு வசனம் பேசுனவங்களும் அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை இருக்கத்தான் செய்றாங்க. அவங்கள எல்லாம் அந்த படத்துல பாரதிராஜா சொல்ற மாதிரி "ரெண்டு பேரும் மனநோயாளிங்களாடா?" கேட்கலாம். கோபபடாதீங்க, ஏன்னு சொல்றேன்.  காதல் எங்க இருந்து வேண்டுமானாலும் ஊற்றெடுக்கும். காதலுக்கு இலக்கணம் என்பது இல்லவே இல்லை. இன்னும் நட்பின் வழியில் காதல் ஏற்படுமாயின் அதனையும் கொண்டாடவேண்டியது இந்த மனித குலத்தின் கடமை. தோற்றமும், படிக்கும் படிப்புமோ அல்லது செய்யும் வேலையும் மட்டும் காதல் உண்டாகிட காரணமாக இருந்து விட முடியாது. வேண்டுமானால் அவை பின்புலக் காரணங்களாக இருக்கலாம். ஆனால் புரிதலோடு  பரிமாற்றம் செய்யப்படும் அன்புதான் எப்படியோ காதலாக பரிணமித்து விடுகிறது. அப்படி நட்பினால் காதல் ஏற்படுமாயின் அதனை தடுக்காது அதன் போக்கிலேயே விடுவது நல்லது.  அதே நேரத்தில் நாங்க எப்பவுமே ஃப்ரெண்ட்ஸ் தான் பாஸ் அப்படினு இருந்தாலும் மகிழ்ச்சி தான். 

காதலை கட்டி வைக்க வேண்டாம், அதனை அதன் போக்கிலேயே விடுவது நல்லது. உங்களுக்கு காதல் உண்டாக எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும் அதனை உடனே வெளிப்படுத்துவதற்கு முன்னதாக உங்களுக்கம் உங்க ப்ரியத்துக்குரியவருக்குமான புரிதலை இன்னும் உறுதியாக்கிக்கொள்ளுங்கள். அது போதும். எப்போதும் காதலியுங்கள். யாரேனும் அவர்கள் காதலுக்கு உதவச் சொனால் கூட உதவுங்கள். காதல் தான் இந்த பிரபஞ்சம் இயங்க காரணமே. அப்படி காதலில் இயங்குவதில் வரும் சிக்கலைத் தீர்க்கத்தான் ஜாலியான லவ் ராசிபலன்களை நாங்க இங்க தர்றோம்.. நீங்களும் ஜாலியா படுச்சுட்டு இந்த நாள ஸ்டார்ட் பண்ணுங்க. 

Love Horoscope Today : வெறித்தனமா ஒன் சைடு லவ்வுல மூழ்கி இருக்கீங்களா நண்பா! அப்படினா, ஜாலியா படிங்க லவ் ராசிபலன்கள்!
மேஷம்

லவ் பண்ணு லைஃப் பேஷா இருக்கும்னு உங்க ஃப்ரெண்ட் சொன்னத கேட்டுட்டு, ஒன் சைடா லவ் பண்ணீட்டு இருக்க உங்களுக்கு அந்த ஃப்ரெண்ட் உங்க லவ்வுக்கு கொஞ்சம் கூட ஹெல்ப் பண்ண மாட்டாங்க. எப்படி லவ்வ எக்ஸ்பிரஸ் செய்யறதேனு தெரியாம முப்பதே நாளில் கமிட் ஆவது எப்படினு எதாவது புக் இருக்கானு தேடுவீங்க. பட் டைம் வேஸ்ட். 

ரிஷபம்

படத்துல வர்ற லவ் சீன்ஸ் எல்லாம் பாத்துட்டு ஒரு மாதிரி ரெடி ஆகி லவ்வ சொல்லாம்னு ரெடியா இருக்குற நாள்ல  உங்க ப்ரியத்துக்குரியவங்க லீவ் போட்டுட்டா எப்படி ஏமாற்றமா இருக்குமோ அந்த மாதிரி ஏமாற்றமான நாள். ஓவர் எக்ஸ்பெக்டேஷன் வேண்டாம் பிகிலு. 

மிதுனம்

எக்ஸாம் எழுதும்போது உங்க ஃப்ரெண்ட் எக்ஸ்ட்ரா அடிஸ்னல் ஷீட் வாங்கி எழுதும்போது உங்களுக்கு துரோகம் செஞ்சுட்டாங்கனு தோனும்ல அந்த மாதிரி பல துரோகங்கள எதிர்கொள்ள வேண்டி வரும். அதனால தான் சொல்றோம் சூதானமா இருங்க. 

கடகம் 

கடைசி மீட்டிங் வரைக்கும் கூடவே இருந்துட்டும் நைட் பனிரெண்டு மணி வரைக்கும் நல்லா பேசீட்டு போன ஒருத்தர் விடுஞ்சதும் எதிர் கட்சில போய் சேந்துட்டா எப்படி உங்களுக்கு அதிர்ச்சியா இருக்குமோ அப்படி இருக்கப்போகுது இந்த நாள். 

சிம்மம்

தோனி ரசிகர்களுக்கு எப்படி தோனி பிஸ்கட்ட காட்டி பல்பு கேடுத்தாரோ அந்த மாதிரி உங்க லவ்வர் உங்களுக்கு இன்னைக்கு பல்பு மேல பல்பு குடுப்பாங்க. ரெடியா இருங்க. 

கன்னி

நீங்களே கைல கால்ல விழுந்து உசார் பண்ணலாம்னு நொனச்சுட்டு இருக்கும்போது உங்க ஆளும் நீங்களும் இருக்குற குரூப்ல உங்க எக்ஸ் கூட எடுத்த ஃபோட்டோவ ஷேர் செஞ்சா எப்படி அடி வயிறு கலங்குமோ அப்படி கலங்கபோகுது இந்த நாள். 

துலாம்

புரட்டாசி மாசம் நோ நான் வெஜ்னு இருக்கும்போது தான் உங்க லவ்வர் உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கேஎஃப்சி போலாம்னு ப்ளான் போடுவாங்க. நீங்களும்  டாட்டாவும் காட்ட முடியாம அவங்கள தடுக்கவும் ப்ளான் இல்லாம பரிதாபமா யோசுச்சுட்டு இருப்பீங்க. 

விருச்சிகம்

லவ்வுல நீங்க ஸ்ட்ராங்கா இல்லாம பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் எதுவும் பிரயோஜனம் இல்லைனு உங்களுக்கு தோனும். லவ் டஸ்நாட் கம் இன் ப்ரேயர்ஸ், இட்ஸ் பேஸ்டு ஆன் கமிட்மெண்ட். புருஞ்சுக்காங்க. 

தனுசு

சாப்பிட போறது தக்காளி சாப்பாடு, சாம்பார் சாதம் தான் உங்களுக்கே நல்லா தெரியும் ஆனாலும் மெனு கார்ட வாங்கி இருக்குற நான்-வெஜ் ஃபுட் எல்லாத்தையும் பாத்துட்டு ஒரு தக்காளி சாதம் குடுங்கனு கேட்கும்போது மனசுல ஒரு வலி இருக்கும் பாருங்க. வலிகளை எதிர்கொள்ள வேண்டிய நாள். 

மகரம் 

மகர ராசி மக்களே உங்களுக்கு இன்னைக்கு செம டே. வேலில போற ஓணான நீங்களா புடுச்சு வேட்டில விட்டுகிட்டாதான் பிரச்னையே. ஹேப்பியா இருங்க. உங்க சந்தோஷம்.., எங்க சந்தோஷம்.  

கும்பம்

நான் 90'ஸ் கிட்லயே  ரக்கட்  கிட். ரெக்காட்டு நோட்டே வீட்ல உடன்பிறப்பு தான் எழுதி தருவாங்க அவங்க கையெழுத்து தான் நல்லா இருக்குனு, பழக்க தோஷத்துல லவ் லெட்டர உங்க உடன்பிறப்ப எழுத சொல்லுவீங்க. அவங்க உங்கள சூப்பரா வீட்டுல போட்டு குடுத்துடுவாங்க. அடிதடி நிறைந்த நாள். 

மீனம்

லவ்வுல ஸ்ட்ராங்க இருக்கனும்னு இருக்க நீங்க தான் லவ்வர் யாருனு தெரியாம எல் ஒன், எல் டூ, எல் த்ரினு உங்க க்ரஸ் நெம்பர சேவ் பண்ணி வெச்சு இருப்பீங்க. சீக்கிரமே நல்ல டெஷிசன் எடுங்க. இல்லையினா சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லைனு சொல்ல வாய்ப்புகள் இருக்கு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget